TET நிபந்தனையால் 10 ஆண்டாக தவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2021

TET நிபந்தனையால் 10 ஆண்டாக தவிப்பு.

 

தமிழகத்தில், 'டெட்' தேர்வு கட்டாயமாக்குவதற்கு முன்பே, பணி நியமனம் செய்யப்பட்ட, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், 10 ஆண்டுகளாக எவ்வித பணிசலுகையும் பெற முடியாமல் தவிக்கின்றனர்.


கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, கற்பித்தல் பணியில் ஈடுபடுவோர், ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டுமென, 2011, நவ. மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை வெளியாகும் முன், மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அடிப்படையில், பணியில் சேர்ந்தவர்களில், அரசு மற்றும் சிறுபான்மை பள்ளிகளில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. 


ஆனால், இதே அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்காததால், எவ்வித பணி சலுகைகளும் அனுபவிக்க முடியாத நிலை உள்ளது.அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சந்துரு கூறுகையில்,'' அரசு உதவிபெறும் பள்ளிகளில், 1,500 பேர் பணியில் அமர்த்தப்பட்டோம். 'டெட்' தேர்வு நிபந்தனைகளில் இருந்து, புதிய அரசு விலக்கு அளிக்க வேண்டும்,'' என்றார்.

7 comments:

  1. நாங்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணிகிடைக்காமல் தற்போது சூழ்நிலையில் தனியார் பள்ளியிலும் பணி இல்லாமல் கிடைக்கும் வேலையை செய்து கொண்டு வாழ்க்கையில் துன்பங்கள் அடைந்து கொண்டு வருகிறோம்.இது மேலே உள்ள கருத்தை சொன்னவர்களுக்கு தெரியாத.

    ReplyDelete
  2. 10 வருஷம் தவிப்பு உள்ளவர்கள்
    TET EXAM எழுதி பாஸ் பண்ணி இருக்க வேண்டிய தானே
    யான் தவிக்க வேணும்.
    நாங்க TET Exam எழுதி பாஸ் பண்ணியே தவிச்சிட்டு வாரோம்.

    ReplyDelete
  3. 5 விரலும் ஒன்றாக இருக்காது

    ReplyDelete
  4. அரசின் தவறான செயல்பாடுகளால் நாம் துன்பப்படுகிறோம் என்னடா 90 மார்க் எடுத்தால் Pass என அறிவித்து விட்டு 82 மார்க் எடுத்து பெயிலா னவங்களுக்கு Posting போடற மேஎன்ற எண்ணம் இல்ைலை நீதிமன்றம் கூட யோசிக்கல. என்ன செய்ய.

    ReplyDelete
  5. அரசு மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு ஒரு சட்டம் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளுக்கு ஒரு சட்டம். Super judgement

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி