ஆகஸ்ட் 1 முதல் சம்பளம், ஓய்வூதியம், EMI செலுத்துதலுக்கான புதிய விதிகள் – RBI அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2021

ஆகஸ்ட் 1 முதல் சம்பளம், ஓய்வூதியம், EMI செலுத்துதலுக்கான புதிய விதிகள் – RBI அறிவிப்பு!

 

ரிசர்வ் வங்கியானது ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவால் இயக்கப்படும் NACH திட்டத்திற்கான புதிய விதிகளை அமல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.


புதிய விதிகள்:


பொதுவாக நாம் நமது மாதாந்திர செலவுகளையும், கடன் தவணைகளையும் தனித்தனியாக குறிப்பிட்ட முறையில் செலுத்துவோம். தற்போது RBI மாதந்திர ஊதியம் பெறும் நபர்கள் இது போன்ற தங்களின் மாதந்திர கடன் தவணை மற்றும் செலவுகளை ஒரே தளத்தின் வழியாக செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் (NACH) மூலம் செயல்படுத்த இருக்கிறது.


தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் என்பது நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தால் இயக்கப்படும் மொத்த கட்டணம் செலுத்தும் முறையாகும். இதன் மூலம் EMI செலுத்துதல், வட்டி, சம்பளம், ஓய்வூதியம் போன்ற பல பரிவர்த்தனைகளுக்கு பணத்தை செலுத்த உதவுகிறது. மேலும், மின்சாரம், எரிவாயு, தொலைபேசி, நீர் கட்டணம், காப்பீடு தொகை, நிதி முதலீடு போன்றவற்றையும் செய்ய உதவுகிறது.


NACH வாரத்தின் அனைத்து நாட்களிலும், ஆகஸ்ட் 1, 2021 முதல் செயல்பட இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் அறிவித்துள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் அனைத்து வசதிகள் பற்றிய அனைத்து நடவடிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களும் RBI ஆல் தனித்தனியாக அறிக்கையாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி