10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் தோறும் அலகுத் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2021

10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் தோறும் அலகுத் தேர்வு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு  நடத்தப்படவில்லை. சென்ற ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கொரோனா பரவலுக்கு முன்னரே நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது.


கொரோனா பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது பள்ளிகள் திறப்பு குறித்து மருத்துவ வல்லுநர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


பிற மாநிலங்களில் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் மூன்றாவது அலை குறித்த அச்சமும் நிலவுகிறது. இந்த சூழலில் பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.


அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி, ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


50 மதிப்பெண்களுக்கு மாத இறுதியில் அலகுத்தேர்வு நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வாட்சப் வாயிலாக 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி