சிறப்பாசிரியர்கள் ஓவியம் 20% இட ஒதுக்கீடு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இன்று வரை பணி நியமனம் அறிவிப்பு இல்லை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2021

சிறப்பாசிரியர்கள் ஓவியம் 20% இட ஒதுக்கீடு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இன்று வரை பணி நியமனம் அறிவிப்பு இல்லை!

2017 ல் சிறப்பாசிரியர்கள் தேர்வு நடைபெற்றது.அதில் உடற்கல்வி, ஓவியம், தையல்,,இசை, படித்தவர்கள் கலந்து கொண்டனர்,.அவ்வாறு தேர்வு முடிந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம்  சில மாதங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தேர்ச்சி வெளியிடப்பட்பது. அவ்வாறு வெளியிடப்பட்ட தேர்ச்சி பட்டியலில் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு 20 சதவீதமும் சேர்த்து தான் வெளியிடப்பட்டது,,,,,சில வழக்குகள் காரணமாக முதல் பட்டியல் நிறுத்தி வைக்க பட்டது,,,,சில மாதங்களுக்கு பிறகு மறு பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டது,,,, அதில் தமிழ் இட ஒதுக்கீடு 20%மட்டும் இன்று வரை பணி நியமனம் செய்யவில்லை ,,,,,தமிழ் இட ஒதுக்கீட்டில் நான்கு வருடம் படிப்பு அரசு கவின் கல்லூரியில் உள்ளவர்களும் இருக்கின்றனர்,,,, அக்கல்லூரியில் நான்கு வருட படிப்பில் தமிழ், ஓவியர்களின் வரலாறு,,,,களிமண் சிற்பம், எண்ணெய்  ஓவியம்,   நீர் ஓவியம்  ,,காட்சி வழி தகவல் தொடர்பு போன்ற பாட பிரிவில் அனைத்திலும் தமிழ் வழியில் பயின்றதற்கு சான்றிதழ் உள்ளது,,,,அரசு கல்லூரி யில் படித்தவர்களுக்கு கண்டிப்பாக தமிழ் வழியில் பயின்றதற்கு சான்றிதழ் இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்தவை,,,,,... ஆகையால் நீதிமன்றத்தில் உள்ள  தீர்ப்பு படி உயர்நிலை  கல்வி,மேல் நிலை கல்வி,,கல்லூரி  அனைத்திலும் உன்மையான தமிழ் வழி சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு  பணி நியமனம் செய்யுங்கள் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்,,,,,மேலும்   நாங்கள் அரசு வேலையை நம்பி தனியார் வேலையும் விட்டு கொரனா காலத்தில் வருமானம் இல்லாமல்  கஷ்ட படுகிறோம்,.... ஆகையால் எங்கள் கோரிக்கையை ஏற்று விரைவில் பணி நியமனம் செய்யுங்கள் என்று தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.



6 comments:

  1. கல்வி செய்தி அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  2. எங்களின் கோரிக்கயை வெளிட்டதற்கு மிக்க நன்றி ...
    Thank you so much for releasing our request

    ReplyDelete
  3. எங்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கை வெளியிட்டதற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  4. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்த கல்வி செய்தியின் வாயிலாக எங்கள் கோரிக்கையை ஏற்று விரைவில் பணி நியமனம் செய்யுமாறு வேண்டிக் கேட்கிறோம்

    ReplyDelete
  5. எங்களின் நீண்ட நாள் கோரிக்கையை வெளியிட்டமைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  6. மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களுக்கு வணக்கம் ஐயா, 2009-ல் இருந்து பதிவு மூப்பு வேலைவாய்ப்புக்காக நாங்கள் காத்துகொண்டிருக்கிறோம் எங்களுக்கும் ஒரு வழி ஏற்படுத்தித்தாருங்கள் ஐயா நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி