அரசு சிறப்புப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான சேர்க்கை துவக்கம் - இணைப்பு: தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 அரசு சிறப்புப் பள்ளிகளின் பட்டியல்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 18, 2021

அரசு சிறப்புப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான சேர்க்கை துவக்கம் - இணைப்பு: தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 அரசு சிறப்புப் பள்ளிகளின் பட்டியல்!

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பார்வைத்திறன் குறைபாடுடையோர் , செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை , கால் இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம் என மொத்தம் 22 அரசு சிறப்புப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு சீருடை , உணவு , தங்கும் இடம் உட்பட அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளுடன் மாணவர்களுக்கான சிறப்புப்பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த அரசு ஆசிரியர்களைக்கொண்டு தரமான கல்வி வழங்கப்படுகிறது. 


எனவே பார்வைத்திறன் குறைபாடுடைய , செவித்திறன் குறைபாடுடைய மற்றும் கை , கால் இயக்கத்திறன் பாதிக்கப்பட்ட மாணவ / மாணவிகள் மற்றும் 5 முதல் 35 வயதுக்குட்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களும் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவும்.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி