முதன்மை கல்வி அலுவலர்களுடன் 4 மணி நேரம் பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் ஆலோசனை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2021

முதன்மை கல்வி அலுவலர்களுடன் 4 மணி நேரம் பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் ஆலோசனை!

பள்ளி கல்வி துறையின் நிர்வாக சிக்கல்கள் குறித்து , முதன்மை கல்வி அலுவலர்களுடன் நான்கு மணி நேரம் பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பள்ளி கல்வி துறை நிர்வாக பணிகள் , மாணவர் சேர்க்கை , பாடப்புத்தகம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து , முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ. க்களுடன் அமைச்சர் மகேஷ் நேற்று ஆலோசனை நடத்தினர்.


வீடியோ கான்பரன்ஸ் முறையில் பகல் , 1:45 மணிக்கு துவங்கிய கூட் டம் , நான்கு மணி நேரம் நடந்தது . பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் , திட்ட அதிகாரி சுதன் , இயக்குநர்கள் கண்ணப்பன் , கருப்ப சாமி , உஷாராணி , ராமேஸ் வர முருகன் , பழனிசாமி மற்றும் இணை இயக்குநர்கள் , சென்னையில் உள்ள டி.பி.ஐ. , வளாகத் தில் , அமைச்சருடன் கூட்டத்தில் பங்கேற்றனர்.


 பள்ளி கல்வி முதன்மை செயலர் உஷா , தலைமை செயலகத்தில் இருந்து கூட்டத்தில் பங்கேற்றார் . ' கொரோனா சூழலை கருத்தில் கொண்டு , மாணவர்களுக்கு , ஆன்லைன் மற்றும் கல்வி , ' டிவி வழியே பாடங்களை நடத்துவதில் , முழு கவனம் செலுத்த வேண்டும். 


அரசு பள்ளிகளில் , மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என , அமைச்சர் மகேஷ் கேட்டுக் கொண்டார். நிர்வாக பணிகளை , எமிஸ் ' என்ற டிஜிட்டல் தளம் வழியே மட்டுமே மேற்கொள்ள வேண்டும். நிதி பரிவர்த்தனைகளை , நிதித்துறையின் மேலாண்மை தளம் வழியே மேற்கொள்ள வேண்டும். இனி நேரடியான நிதி பரிவர்த்தனைகள் கூடாது. நிர்வாக பணிகளில் , எந்த சிக்கலும் இல்லாமல் , அரசின் உத்தரவுக்கு ஏற்ப சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் ' என , சி.இ.ஓ.க்களுக்கு உத்தரவிடப்பட்டது.



5 comments:

  1. கல்வி துறை அமைச்சர் அவர்களே ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருக்கின்ற தமிழ் வழியில் உள்ள சிறப்பாசிரியர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  2. So,
    You did not discuss the teacher appointment in government school.
    This government also is going to give big alvaaaaaaa for the teachers appointment....

    ReplyDelete
  3. They will not discuss about transfer promotion and appointment.They will discuss about only money matters...

    ReplyDelete
  4. பேசாம பள்ளிக்கூடம் கல்லூரி இழுத்து மூடிவிட்டு govt டீச்சர் சம்பளம் கொடுக்கமால் இருந்தால் நல்லுது வேலையில்லாமல் வீட்டுல இருக்கும் ஆசிரியர்களுக்கு சும்மா ஓபி அடித்து சம்பளம் ஒரு கேடா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி