செப்டம்பர் 5-ல் நீட் நுழைவுத் தேர்வு என்பது தவறான தகவல் - தேசிய தேர்வு முகமை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 8, 2021

செப்டம்பர் 5-ல் நீட் நுழைவுத் தேர்வு என்பது தவறான தகவல் - தேசிய தேர்வு முகமை

 

நீட் தேர்வு குறித்து வெளியான தகவல் தவறானது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. அதேபோல் தமிழக அரசும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தது. இந்நிலையில் நீட் தேர்வு நடக்குமா நடக்காதா என்று நிலையற்ற சூழல் நிலவுவதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


இதனிடையே செப்டம்பர் 5ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில், நீட் தேர்வு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. நீட் தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருவதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

1 comment:

  1. தேசிய‌ தேர்வு முக‌மை வ‌லைத‌ள‌த்திலும் நீட் தேர்வு தேதி வெளியிட‌ப்ப‌ட்டு இருந்த‌து...க‌ல்விச் செய்தியும் அத்த‌க‌வ‌லை உறுதி செய்த‌து...இப்பொழுது த‌வ‌றான‌ த‌க‌வ‌ல் என்று சொன்னால்....
    உங்க‌ளையெல்லாம் என்ன‌ செய்வ‌து?...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி