9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி, 10,11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என அச்சிட்டு வழங்குதல் அனுமதித்து அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 30, 2021

9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி, 10,11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என அச்சிட்டு வழங்குதல் அனுமதித்து அரசாணை வெளியீடு.

GO NO : 15 DATE : 26.07.2021 - pdf - Download here

ஆணை :
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 25.022021 அன்று சட்டமன்றப் பேரவையில் , சட்டமன்ற பேரவை விதி 110 - ன் கீழ் , வெளியிட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு பள்ளிக்கலவி இயக்குநரின் பரிந்துரையின் அடிப்படையில் , தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலையை கருத்தில் கொண்டும் , பெற்றோர்களின் கோரிக்கைகள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்களை பரிசீலித்தும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் , 2020-21ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள் , மெட்ரிகுலேசன் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் 9 - ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10 , 1 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெறுகின்றனர் எனவும் , இவர்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருபவர்களின் பெயர்ப்பட்டியல் ( Nominal Roll ) , சார்ந்த பள்ளிகளிலிருந்து பெறப்பட்டதன் அடிப்படையில் , அவர்கள் தேர்ச்சி பெற்றதற்கான உரிய பதிவுகளுடன் கூடிய சான்றிதழை வழங்குமாறு அரசுத் தேர்வுகள் துறை இயக்குநருக்கு அறிவுரை வழங்கியும் மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டது.


அதனடிப்படையில் , மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதங்களில் , கொரோனா தொற்று நோய் பரவலின் காரணமாக 2020-2021ஆம் கல்வியாண்டில் 9 , 10 , மற்றும் 11 ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும் , முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் , 2020-2021 - ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சிக்கான சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக 08.05.2021 அன்று பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் 2020-2021 - ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் கீழ்க்காணுமாறு அச்சிட்டு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் அனுமதி வேண்டியுள்ளார்.


 “ அரசாணை ( நிலை ) orodo.48 , பள்ளிக் கல்வித் ( அ.தே ) துறை , நாள் 25.022021 - ன்படி , 2020-2021ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு பயின்ற அனைத்து தேர்வர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி மேற்காண் தேர்வர் பின்வரும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் எனச் சான்றளிக்கப்படுகிறது " என்ற வாசகத்தை அச்சிட்டு , ஒவ்வொரு பாடத்திற்கும் மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான கலத்தில் மட்டும் மதிப்பெண்களுக்கு பதிலாக தேர்ச்சி ( Pass ) என பதிவு செய்து சான்றிதழ் வழங்கலாம்.


என மேற்காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கருத்துருவினை ஆய்வு செய்த அரசு , அதனை ஏற்று , தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக , 2020-2021 - ஆம் கல்வியாண்டில் , பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு பொதுத் தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , பத்தாம் வகுப்பு | மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் மேலே பத்தி -2 ல் குறிப்பிட்டுள்ளவாறு அச்சிட்டு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி வழங்கி ஆணையிடுகிறது.

1 comment:

 1. BUDDHA ACADEMY

  PGTRB HISTORY ONLINE COACHING

  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள முதுகலை வரலாறு பணித் தேர்விற்கு இணையவழி (Online) மற்றும் நேரடி வகுப்பு (Live class வார இறுதிநாட்களில் மட்டும்) வரலாறு பாடத்திற்கு எங்களது புத்தா அகாடமி தருமபுரி, மூலம் மிகச் சிறந்த முறையில் பயிற்சி அளிக்க உள்ளோம்.
  வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கி தொடர்ச்சியாக நடைபெறும். வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வரலாற்று பாடப்பிரிவு ஆசிரியர்கள் இவ்வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
  இணையவழி சம்பந்தமான தகவல் தங்களது சேர்க்கை உறுதி செய்த பின் தனியாக தங்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பப்படும்.

  எங்களது புத்தா அகாடமியில் வரலாறு பாடப்பிரிவுக்கு பயின்ற தேர்வர்களில் 2019 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை ஆசிரியர் தேர்வில் வரலாறு பாடப்பரிவில் 26 நபர்கள் தேர்ச்சி பெற்றும் 19.02.21 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வரலாறு பாடப்பிரிவிற்கு வெளியிடப்பட்ட இரண்டாம் கட்ட தேர்வு முடிவில் 5 தேர்வர்களில் 3 தேர்வர்களும்(19PG081808333 PREMKUMAR M / 19PG081306525 PRIYANGA P / 19PG083901966 SEENUVASAN M) மொத்தம் 29 நபர்கள் தேர்ச்சி பெற்று தேர்வாகியுள்ளனர் அதில் மாநில அளவில் முதல் இடம்(19PG081812263 MOORTHI.M ) மற்றும் மூன்றாம் இடம்(19PG081808325 ADHIMOOLAM A) எங்களது புத்தா அகாடமி தேர்வர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்

  குறிப்பு : மற்ற பாடப்பிரிவு தேர்வர்களுக்கு உளவியல் (Psychology) வகுப்புகளுக்கும் பயிற்சி அளிக்கபடும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

  இங்ஙனம்
  புத்தா அகாடமி,
  தருமபுரி.

  தொடர்புக்கு
  புத்தா அகாடமி
  இடம்: பிஷப் ஹவுஸ்
  ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
  +91 99620 27639 / +91 88380 72588

  YOUR SUCESS OUR AIM

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி