தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆணையர் உத்தரவு! - kalviseithi

Jul 29, 2021

தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆணையர் உத்தரவு!

தமிழகத்தில் கல்வித் தொலைக்காட்சியில் சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு பரிசும், பள்ளிகளில் பட்டியலின மாணவர்களை அதிகம் சேர்க்கும் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பரிசும், ஊக்கத்தொகையும் :

தமிழகத்தில் பட்டியலின மாணவர்களுக்கு அரசு பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், இடஒதுக்கீடும் வழங்கி உள்ளது. இதன் மூலம் பட்டியலினத்தவர்களும் அனைத்து துறைகளிலும் முன்னேற அரசு வாய்ப்பை வழங்குகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் வகுப்பு வாரியாக கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.


இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. மேலும் பள்ளிகளில் பட்டியலின மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது பரவி வரும் கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி கற்றல் நின்று விடக்கூடாது என்பதற்காக அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது


அதன் மூலம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். ஒவ்வொரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் வீதம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் பாடம் எடுத்து வருகின்றனர். இந்த கல்வி தொலைக்காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், மென்மேலும் கற்பித்தலில் புதுமையை புகுத்த தூண்டும் வகையிலும் அரசு கல்வித் தொலைக்காட்சியில் சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியருக்கு விருது வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி