பொறியியல் படிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - உயர்க் கல்வித்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 26, 2021

பொறியியல் படிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - உயர்க் கல்வித்துறை அறிவிப்பு.

 

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்க் கல்வித்துறை அறிவித்துள்ளது.


12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் வெளியான நிலையில் உயர்க் கல்விக்கான மாணவர் சேர்க்கை பணிகள் தமிழகத்தில் தொடங்கியுள்ளன. இதன்படி பொறியியல் படிப்புக்கு இன்று முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரேண்டம் என் ஆகஸ்ட் 25 ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4 ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை சிறப்பு இடஒதுக்கீடு பிரிவில் இடம் பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.


பின்னர் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலும் துணை கலந்தாய்வு அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலும், ஆதிதிராவிடர் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி