ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் , காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும் - அமைச்சரிடம் ஆசிரியர் சங்கம் கோரிக்கை! - kalviseithi

Jul 8, 2021

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் , காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும் - அமைச்சரிடம் ஆசிரியர் சங்கம் கோரிக்கை!


கடலுார் ஆசிரியர் இல்லம் அமைக்கப்பட உள்ள இடத்தில் ஆக்கிரமிப்பை மீட்டு தர கோரி தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக் கல்வி அமைச்சரிடம் மனு அளித்துள்ளனர்.


தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில தலைவர் தீனதாயளன், மாநில பொதுச்செயலாளர் ஜான்வெஸ்சி, மாநில பொருளாளர் ருக்மாங்கதன், பூந்தமல்லி ஒன்றிய செயலர் ஆனந்த், திருவள்ளுர் மாவட்ட துணைத் தலைவர் வேதநாயகம் ஆகியோர் பள்ளி கல்வி அமைச்சர் மகேஷிடம் அளித்த மனு:


காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு மற்றும் கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும். கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். ஆசிரியர்களின் உயர் கல்வி தகுதிக்கு பின்னேற்பு வழங்க உத்தரவிட வேண்டும்.ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட ஆசிரியர்களின் சார்பாக 20.06.1972ல் கடலுார் சுப்புராயலு நகரில் 1 ஏக்கர் 20 சென்ட் இடம் ஆசிரியர் இல்லம் அமைக்க முடிவு செய்து வாங்கப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெயரில் பதிந்த அந்த இடம் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனை மீட்டெடுத்து வங்கியில் டிபாசிட் செய்துள்ள தொகை மூலம் கடலுார் ஆசிரியர் இல்லம் ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

9 comments:

 1. அனைத்து ஆசிரியர்களும், பெற்றோரும் மாணவர்களும் எப்போது பள்ளி திறக்கும் என ஆவலுடன் உள்ளனர்.

  ReplyDelete
 2. Can anyone tell how many vacant posts are in BT Asst and PG Asst in all Government High school and Government Higher Secondary Schools ?

  ReplyDelete
 3. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 4. Waiting for transfer counselling update....

  ReplyDelete
 5. பத்தாண்டுகள் அதிமுக கல்வியை வியாபாரம் செய்து சிபிஎஸ்இ பள்ளிகள் அதிக அனுமதிஅளித்து அமைச்சர் செங்கோட்டையன் பணம்சம்பாதித்து சாதனை படைத்தது மிச்சம்

  ReplyDelete
  Replies
  1. அப்படிப்பட்ட செங்கோட்டையனையும் MLA பதவி வழங்கிய பெருமை நம் மக்களையே சாரும்

   Delete
 6. இந்த ..... எல்லாம் கரெக்டா கேளுங்க...
  Turn duty வராதீங்க..
  சம்பளம் full ஆ வேணும்.. வேலை ஒரு நாள் கூட பார்த்திர கூடாது..

  ReplyDelete
 7. வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர் சமூகம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி