தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2021

தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ்

 

சி.பி.எஸ்.இ. போல் தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். எவ்வளவு சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும் என்பது அதுபற்றிய ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். நடப்பு கல்வியாண்டிலும் நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத சூழல் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டில் பின்பற்றப்பட்ட பாடத்திட்டங்கள் குறைப்பு (30 சதவீதம்) முறையையே நடப்பு கல்வியாண்டிலும் (2021-22) தொடருவதற்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியாண்டு இரண்டாக பிரிக்கப்பட்டு, 2 பொதுத்தேர்வுகள் நடத்துவதற்கு சி.பி.எஸ்.இ. திட்டமிட்டுள்ளது.


இந்த தேர்வுகள், குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே நடத்தப்பட இருக்கின்றன.  குறைக்கப்பட்ட பாடங்களின் அடிப்படையிலேயே உள்மதிப்பீடு, பயிற்சி, திட்டங்களை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று கடந்த ஆண்டில் அதிகமாக இருந்ததால், கடந்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் வழியாகவே நடத்தப்பட்டன. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் முழு பாடங்களையும் கற்றுக்கொள்ள முடியாது என்பதை கருத்தில் கொண்டும், அவர்களின் சுமையை குறைக்கும் வகையிலும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் அனைத்து பாடங்களிலும் 30 சதவீத பாடத்திட்டத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.

4 comments:

  1. ஐயா விரைவில் அறிவிப்பு செய்யுங்கள்

    ReplyDelete
  2. மீடியா கிடைத்தால் போதும், எதையாவது சொல்லவேண்டியது.

    ReplyDelete
  3. ஆலோசனை மந்திரி அன்பில் மகேஷ் வாழ்க....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி