அழகப்பா பல்கலை ஆன்லைன் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2021

அழகப்பா பல்கலை ஆன்லைன் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைகழகத்தில் 2021-2022ம் கல்வியாண்டுக்கான முதுகலை படிப்புகளுக்கு மாணவர்கள் ஜூலை 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.


மாணவர் சேர்க்கை:


தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு தயாராகி வருகின்றனர். கடந்த ஜூலை 19ம் தேதி 12ம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே தமிழக முழுவதும் உள்ள தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, பெறப்பட்டு விட்டது. தற்போது ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்க அரசு அறிவித்துள்ளது.


கேரளாவில் தமிழ் மொழியில் ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் – மாநில அரசு நடவடிக்கை!!


அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள பல்கலை மற்றும் கல்லூரிகளில் முதுகலை மாணவர் சேர்க்கை பணிகளும் தொடங்கப்பட்டு விட்டது. இந்த மாதம் இறுதி வரை முதுகலை மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2021-2022ம் கல்வியாண்டுக்கான முதுகலை மாணவர் சேர்க்கை குறித்து பல்கலையின் பதிவாளர் சி.சேகர் அவர்கள் அறிவித்துள்ளார். அதன்படி, இளங்கலையில் மாணவர்கள் அனைத்து செமஸ்டர்களிலும் பெற்ற 3ம் பகுதி மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.


முன்னதாகவே விண்ணப்பித்த மாணவர்கள் தற்போதும் விண்ணப்பிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் இணையத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு மதிப்பெண்களை உள்ளிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிக விவரங்களுக்கு admissions.alagappauniversity.ac.in/departmentsadmission  என்ற இணையதளத்தில் மற்றும், 04565-223111/113 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி