அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்?- ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2021

அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்?- ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு.

 

அரசுப் பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.


அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்போது விண்ணப்ப கட்டணமாக 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்கலாம். ஆனால் செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு ரூ.100 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக பள்ளிக் கல்வி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதை பதிவுசெய்துகொண்ட நீதிபதி, அரசுப்பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆய்வு செய்த அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

2 comments:

  1. Private school ஆய்வு நடத்த மாட்டீங்களா?அவர்கள் online pay panna solli vanguranka,ethuvae evidence iruku apram govt ,court kannduka matteranga

    ReplyDelete
  2. Pls Justify govt school or govt aided school. Most of the aided school s are recieved more donation near 15 k.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி