பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது குறித்து செய்தி வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2021

பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது குறித்து செய்தி வெளியீடு!

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காகப் பள்ளிக் கல்வித்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் , அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை , பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கு ஆற்றிவரும் கல்விப் பணிகள் குறித்தும் , அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் , மாண்புமிகு தமிழ்நாடு முதல்மைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று ( 1.7.2021 ) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது . அரசுப் பள்ளிகளில் குடிநீர் , கழிவறை , மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் , பள்ளி வளாகப் பராமரிப்பு , பாதுகாப்புப் பணிகளைத் திறம்பட மேற்கொள்ளவும் , இணைய வசதிகளைப் பள்ளிகளில் ஏற்படுத்துவது குறித்தும் , மாணவர்களின் கற்றல் அடைவில் கவனம் செலுத்தித் தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்துவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை வழங்கினார் . தரமான அடிப்படைக் கல்வி முதல் , அரசுப் பள்ளி மாணவர்களை இந்தியாவின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறச் செய்வது வரை , பள்ளிக் கல்வித் துறையின் ஒட்டுமொத்த மறுமலர்ச்சியை ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். 


இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு . அன்பில் மகேஷ் பொய்யாமொழி , தலைமைச் செயலாளர் முனைவர் வெ . இறையன்பு , இ.ஆய. , நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு . ச . கிருஷ்ணன் , இ.ஆய. , பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உஷா , திருமதி . காகர்லா பள்ளிக் கல்வி ஆணையர் திரு.க. நந்தகுமார் , இ.ஆய. , மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



2 comments:

  1. FOR NEW MEMBERS :-

    தங்களுக்கு தேவையான குழுவில் இணைந்து கொள்ளவும்



    PGTRB MATHS CLASS VIDEOS

    For pgtrb maths exam aspirants

    https://telegram.me/pgtrbmathsgroup




    PGTRB EDUCATIONAL PSYCHOLOGY ALL MAJOR SUBJECT

    https://telegram.me/pgtrbeducationgroup




    TNTET PAPER 1 & 2

    https://telegram.me/tntetgroup




    TNPSC GROUP LINK


    https://telegram.me/tnpscgroupall



    Link copy paste செய்து சேர்ந்து கொள்ளவும்

    ReplyDelete
  2. காலிப்பணியிடங்கள் எவ்வளவு,
    ஆசிரியர் நியமனம் எந்த முறையில் நடைபெறும் என்று தெளிவுபடக் கூறுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி