பொறியியல் மாணவர்களின் கவனத்திற்கு....செமஸ்டர் வகுப்புகள் , தேர்வுகள் தொடங்கும் தேதி அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2021

பொறியியல் மாணவர்களின் கவனத்திற்கு....செமஸ்டர் வகுப்புகள் , தேர்வுகள் தொடங்கும் தேதி அறிவிப்பு.

நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் கல்லூரி செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான நடப்பு கல்வி ஆண்டின் செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 13ம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் நடப்பு செமஸ்டரின் கடைசி வேலை நாள் நவம்பர் 30 என்றும் டிசம்பர் 2ம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்ட கடந்த 2 நாட்களில் 41,363 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 20,660 மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கான ரேண்டம் எண்களை ஆகஸ்ட் 25ம் தேதியும் தரவரிசை பட்டியல் செப்டம்பர் 4ம் தேதியும் வெளியிட உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி