இனி EMIS மூலம்தான் தரவுகள் பெறப்படும் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள். - kalviseithi

Jul 4, 2021

இனி EMIS மூலம்தான் தரவுகள் பெறப்படும் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதங்களில் பள்ளிக் கல்வித் துறை சார்பான தரவுகள் ( அனைத்து வகை பள்ளி மேலாண்மை , மாணாக்கர்கள் ஆசிரியர்கள் / அலுவலர்கள் எண்ணிக்கை மற்றும் நலத்திட்டத்தில் கல்வியியல் உபகரணங்கள் முதலியன ) கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை ( EMIS ) மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உடனுக்குடன் புதுப்பிக்கப்பட ( Current Undation ) வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . அதனடிப்படையில் , இனிவரும் காலங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் மேற்குறிப்பிட்ட விவரங்கள் நேரடியாக கோரப்படுவதை கைவிட்டு கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை மூலம் மட்டுமே தரவுகள் பெற்று பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே , பள்ளிக் கல்வி ஆணையர் அலுவலகம் சார்பாக தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழகத்திற்கு 2021-2022 ஆம் கல்வியாண்டு 1 முதல் 7 ஆம் வகுப்பு வரையிலான இரண்டாம் பருவம் பாடப்புத்தகம் சார்பாக குறிப்பிட்ட மாதிரி படிவத்தின் படி தரவுகள் பெற்று தர கேட்டுக்கொள்கிறேன்.
No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி