தகுதிகள் முதல் வேலை வாய்ப்புகள் வரை - சட்டப் படிப்புகள் A to Z வழிகாட்டுதல் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 10, 2021

தகுதிகள் முதல் வேலை வாய்ப்புகள் வரை - சட்டப் படிப்புகள் A to Z வழிகாட்டுதல்

 

சட்டப்படிப்பு பயில்வதற்கான தகுதிகள் என்னென்ன? சட்டப்படிப்பு படிக்க சிறந்த கல்வி நிலையங்கள் எவை? சட்டப்படிப்பு பயில அரசின் ஊக்கத்தொகை கிடைக்குமா? சட்டம் படித்தோருக்கு எங்கெல்லாம் வேலை வாய்ப்பு கிடைக்கும்? - சட்டப்படிப்பில் உள்ள உட்பிரிவுகள் குறித்தும், அது சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்தும் பார்ப்போம்.


டிப்ளமோ பாடப் பிரிவுகள்: டிப்ளமோ இன் க்ரிமினல் லா, டிப்ளமோ இன் பிஸ்னஸ் லா, டிப்ளமோ இன் கார்ப்ரேட் லா & மேனேஜ்மெண்ட், டிப்ளமோ இன் கோ-ஆப்ரேட்டிவ் லா, டிப்ளமோ இன் சைபர் லா, டிப்ளமோ இன் க்ரிமினாலஜி, டிப்ளமோ இன் ஹியூமன் ரைட்ஸ் லா. டிப்ளமோ படிப்புகளை 1 முதல் 3 வருடப் படிப்புகளாக படிக்கலாம்.


இளநிலை பாடப் பிரிவுகள்: எல்.எல்.பி. பேச்லர் ஆஃப் லா, பி.பி.ஏ.+ எல்எல்.பி. - பேச்லர் ஆஃப் பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன் & பேச்லர் ஆஃப் லெஜிஸ்லேட்டிவ் ஆஃப் லா - Bachelor of Business Administration & Bachelor of Legislative of Law, பி.ஏ.+ எல்எல்.பி. - பேச்லர் ஆஃப் ஆர்ட்ஸ் & பேச்லர் லெஜிஸ்லேட்டிவ் ஆஃப் லா, பி.காம் + எல்எல்.பி. - பேச்லர் ஆஃப் காமர்ஸ் & பேச்லர் ஆஃப் லெஜிஸ்லேட்டிவ் ஆஃப் லா, பி.எஸ்.எல் + எல்எல்.பி. - பேச்லர் ஆஃப் சோஷியோ - லீகல் சயின்ஸஸ் & பேச்லர் ஆஃப் லா.இளநிலை படிப்புகளை 3 முதல் 5 வருடப் படிப்புகளாக படிக்கலாம்.


சான்றிதழ் பாடப் பிரிவுகள்:  சர்டிஃபிகேட் கோர்ஸ் இன் சைபர் லா, சர்டிஃபிகேட் கோர்ஸ் இன் பிஸ்னஸ் லா, சர்டிஃபிகேட் கோர்ஸ் இன் கார்ப்ரேட் லா, சர்டிஃபிகேட் கோர்ஸ் இன் ஆண்டி- ஹியூமன் ட்ராஃபிகிங், சர்டிஃபிகேட் கோர்ஸ் இன் இன்சூரன்ஸ் லா. சான்றிதழ் பாடங்களை 2 வாரங்கள் முதல் 6 மாதப் படிப்புகளாக படிக்கலாம்.


தமிழகத்தில் உள்ள 38 கல்லூரிகளில் சட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. சட்டப்படிப்பு சார்ந்த வேலைவாய்ப்புகள்: லாயர், பப்ளிக் ப்ராசிகியூட்டர், கார்ப்ரேட் ஆஃபிஸ் லீகல் அட்வைசர், விரிவுரையாளர், லீகல் எக்சிகியூட்டிவ்ஸ்.


சில முக்கியக் குறிப்புகள்: எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவர்கள் இளநிலைப் பட்டப்படிப்பை 35% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்; ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் சேர வேண்டுமெனில், பள்ளி மேல்நிலைப்படிப்பை முடித்திருக்க வேண்டும்; அம்பேத்கர் சட்ட பல்கலை மூலம் நடத்தப்படும் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கிடையாது; +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.


சட்டத்துறையில் முதுநிலைப் படிப்பில் சேர வேண்டுமெனில், இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்; CLAT தேர்வின் அடிப்படையிலேயே தேசிய சட்ட பள்ளிகளில் சேர்க்கை நடைபெறும்; டெல்லி தேசிய சட்டப் பல்கலை, ஒரிசா சட்டப் பல்கலை தாங்களே நுழைவுத் தேர்வை நடத்துகின்றன; பிற தன்னாட்சி சட்டக் கல்வி நிறுவனங்கள், தாங்களே நடத்தும் நுழைவுத் தேர்வுகளின் மூலமாக மாணவர் சேர்க்கையை மேற்கொள்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி