தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் – இன்று வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2021

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் – இன்று வெளியீடு!

 

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் 2020-21 ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ( ஆகஸ்ட் 23) 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


மதிப்பெண் சான்றிதழ்:


தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. கடந்த கல்வியாண்டு முதல் ஆன்லைன் வகுப்புகள் காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்தது.


அதன்படி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர மதிப்பெண் அவசியம் என்பதால் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதி ஆன்லைன் மூலமாக வெளியிடப்பட்டது. அதன் பின்னர் மதிப்பெண் சான்றிதழ்களும் ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னீக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்த உத்தரவிடப்பட்டது.


இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, 10 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று (ஆகஸ்ட் 23) இணையத்தில் வெளியிடப்படுகிறது. அதன்படி இன்று காலை 11 மணி அளவில் மதிப்பெண் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள் தேர்வு துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.dge.tn.gov.in என்ற முகவரியில் பதிவு எண், பிறந்த தேதி, ஆகிய விவரங்களை பதிவு செய்து சான்றிதழ்களை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.பள்ளிகளும் தற்காலிக சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி