விடுபட்ட கற்போர்களின் மதிப்பீட்டு மதிப்பெண் விவரங்களை 19.08.2021-குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 18, 2021

விடுபட்ட கற்போர்களின் மதிப்பீட்டு மதிப்பெண் விவரங்களை 19.08.2021-குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இயக்குநர் உத்தரவு.


தமிழகத்தில் , 2020-21 ஆம் நிதியாண்டில் 15 வயதுக்கு மேற்பட்ட , முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத 3.10 இலட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவை வழக்கிடும் நோக்கில் கற்போம் எழுதுவோம் இயக்கம் , ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு , கற்போர்கள் அனைவருக்கும் குறைந்தப்பட்ச சுற்றல் அடைவுகளின் அடிப்படையிலான மதிப்பீட்டு முகாம் 29.07.2021 முதல் 31.07.2021 வரை மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது . மேற்காண் முகாம்களில் பங்கேற்ற மொத்த கற்போர்களின் எண்ணிக்கை 327206 பேர் ஆனால் 90428 மட்டுமே கற்போர் மதிப்பெண் மற்றும் இதர விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 


மீதமுள்ள 236778 கற்போர்களின் மதிப்பீட்டு மதிப்பெண் விவரங்களை மையங்கள் சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்களால் வருகின்ற 19.08.2021 அன்று மாலை 5.00 மணிக்கும் பதிவேற்றம் செய்திடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி