பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு - 20.09.2021 வரை நீட்டித்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2021

பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு - 20.09.2021 வரை நீட்டித்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின்கீழ் 2021-22 - ஆம் ஆண்டிற்கான 6-19 வயதுடைய பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனுடைய குழந்தைகளைக் கண்டறியும் கணக்கெடுப்பு பணி 10.08.2021 முதல் நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்பு பணிக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் EMIS common pool- ல் உள்ள மாணாக்கர்களின் விவரங்களை நேரடியாக ஆய்வு செய்யவும் , வீட்டு வாரியான கணக்கெடுப்பு நடத்தி பள்ளியில் சேராத குழந்தைகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

31.08.2021 - க்குள் இக்கணக்கெடுப்பு பணியினை நடத்தி முடிக்க இயலாததால் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி இக்கணக்கெடுப்பு பணியினை 20.09.2021 அன்று வரை தொடர்ந்து நடத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் , தற்பொழுது 9 - ம் வகுப்பு முதல் 12 - ம் வகுப்பு வரை 01.09.2021 அன்று பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் மாணாக்கர்கள் யாரேனும் பள்ளிக்கு வருகை புரியாமல் இருந்தால் , அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி