அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு..?? முதல்வர் செய்த முக்கிய ஆலோசனை என்ன?? - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 5, 2021

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு..?? முதல்வர் செய்த முக்கிய ஆலோசனை என்ன??

 

அமைச்சரவை கூட்டம்:

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில்  (ஆகஸ்ட் 4) நடைபெற்ற  அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக மாற்றியமைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களது ஓய்வு காலத்தை 58லிருந்து 60 ஆக உயர்த்தி முந்தைய ஆட்சியில் இருந்த அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் அரசு ஊழியர்கள் கூடுதலாக 2 வருடங்கள் வேலை செய்ய வேண்டி இருப்பதால், அரசுத்துறைகளில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது.


இதனால் அரசு வேலைக்காக காத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தற்பொழுது ஆட்சியமைத்துள்ள முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண விரும்புகிறது.


ஓய்வு வயது 58 ஆக மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுள்ளது:


அதாவது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தி அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் புதிய அரசு வேலைகளை பெற்றுக்கொள்வதில் ஓய்வு காலம் தடையாக இருப்பதால் இந்த காலத்தை மீண்டும் 58 ஆக மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.


 இதனிடையே கொரோனா நோய் தொற்று காரணமாக அரசுக்கு பெருமளவு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இந்த செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்த ஆலோசனையில் முதல்வர் முக ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.


அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ஓய்வு பெற வேண்டிய அரசுத்துறை ஊழியர்கள், கிட்டத்தட்ட 9 மாதங்களாக பணியில் தொடர்ந்து வருவதால், அவர்களை மேலும் 3 மாதங்களுக்கு பணிபுரிய அனுமதித்து ஓய்வு அளிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

23 comments:

 1. Also please consider 33 years service govt staffs retairement

  ReplyDelete
  Replies
  1. எந்த மாநிலத்திலும் பணி அனுபவத்தின் அடிப்படையில் ஓய்வு வழங்கப்படவில்லை .வயதை அடிப்படையாக வைத்து மட்டுமே ஓய்வு வழங்கப்படுகிறது .ஆகவே வயது அடிப்படையில் தான் இந்த அரசு ஓய்வு வழங்கும் .அது 58 or 60 .

   Delete
 2. Waiting for transfer counselling

  ReplyDelete
 3. ilangarkalin velai vaaipaai perukka vendum atharkaga age 58 aaga kuraikka vendum

  ReplyDelete
 4. பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது

  ReplyDelete
  Replies
  1. 2019 pg selected teachers counseling attend panna moodiyuma

   Delete
  2. ஆம்... டெல்லியில் கவுன்சிிங்(3வ௫டம் ஒரே பள்ளியில் பணியாற்ற வேண்டும்)

   Delete
 5. What about da for tn govt employees?

  ReplyDelete
 6. 33 YEARS SERVICE COMPLEATED COMPULSURY RETIREMENT BUT 9 YEARS COMPLEATED 58 YEARS AGE KURAIKA VENDAM

  ReplyDelete
  Replies
  1. Correct sir, bcoz of politics we are join late, .

   Delete
  2. Ungaluku 9 years naraya per ku innum job kedaikave illa mithavangalum valattum

   Delete
  3. Ungaluku job kidaikalaina yaaru thappu?? But inga ovvoru postla select aaguradhukum join panradhukum evlo time gap iruku nu paarunga..case case nu file panni avangalum pogama selected candidateaiyum poga vidama delay panranga..enakulam selection list vandhadhu November 2019la but join pannadhu 2021 Februaryla. Nearly 1.5 yrs service poyiruchu. Ipo adhaiyum kuraika paarkuranga..

   Delete
 7. Youth pls send petition to c.m to reduce age of retirement. U r losing ur jobs .58 only correct age for retirement.

  ReplyDelete
 8. 33years service அடிப்படையில் ஓய்வு வழங்கினால் மிக சொற்ப பேர் தான் ஓய்வு பெறுவார்கள் . இதனால் காலி பணியிடங்கள் மிக குறைவாக தான் ஏற்படும் . ஆனால் 58 வயது என்று குறைத்தால் நாற்பதாயிரம் பேர் உடனடியாக ஓய்வு பெறுவர் .

  ReplyDelete
 9. Cps ஒழியும் GPF கிடைக்கும்னு திமுக ஓட்டு போட்டது எங்வளவு முட்ளானு உனருங்க. இப்ப வயது குறைப்பவேறாம். எல்லாம் தலை எழுத்து. அதுக்கு அதிமுக ஓட்டு போட்டிருந்தா 60 வரை இருந்திருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. பணக்காரன் மேலும் பணக்காரன் ஆக வேண்டும் ஏழை ஏழையாகவே இருக்க வேண்டும்... அப்படி தானே! நல்ல எண்ணம்..... எவ்வளவு பணம் இருந்தாலும் உங்களுக்கு எல்லாம் அந்த பேராசை குணம் போகாது போல.....

   Delete
  2. Paathu ipdi sampathichu pudungitu poida poguthu

   Delete
 10. 58ah reduce Panna niraiya problem create agum

  ReplyDelete
 11. Yesterday malaimalar paperla 60 vasyasa kuraikavillentru seithi

  ReplyDelete
 12. *இந்திய மாநிலங்களில் அரசுப் பணியாளர்கள் & ஆசிரியர்களின் ஓய்வு வயது*
  *The superannuation (Retirement age)period of different states in India*

  1.Andhrapradesh. ......60
  2.Arunachal Pradesh..60
  3.Assam.....................60
  4.Bihar........................60
  5.Delhi .......................62
  (Municipal corporation of delhi60)
  6.Goa.........................60
  7.Gujarat....................58
  8.Hariyana.................60
  9.Himachal pradesh..58
  10.Jammu.................60
  11.Jharkhand............60
  12.Karnataka.............60
  13.Kasmir...................60
  14.Kerala...................60
  15.Madhyapradesh.....62
  16.Maharastra............60
  17.Manipur..................62
  18.Meghalaya.............58
  19.Mizoram................60
  20.Nagaland...............60
  21Odissa....................60
  22.Punjab...................58
  23.Rajasthan..............60
  24.Sikkim....................60
  25.Tamilnadu..........60
  26.Telangana...............58
  (CM promised to extend 61)
  27.Utterpradesh...........62
  28.Uttarakhand............60
  29.chatisgarh62
  30.westbengal 60
  31.tripura......60
  32. Puducherry.....60

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி