தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறை விரைவில் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2021

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறை விரைவில் வெளியீடு

 

தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று தரிசனம் செய்த பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு 50 சதவீத மாணவர்களுடன் செப்.1 முதல் பள்ளிகளைத் திறக்கலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். பள்ளிகளை திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். இன்னும் 2 நாட்களில் இது முடிவு செய்யப்பட்டுவிடும்.


தனியார் பள்ளிகளில் 85 சதவீதம் கல்விக் கட்டணம் வசூலிக்கலாம். கரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் 75 சதவீதம்தான் வசூலிக்க வேண்டும். அதையும் செலுத்த முடியாதவர்களுக்கு முழுமையாக விலக்கு அளிக்க பரிசீலிக்கலாம் என உயர் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி பாடத்திட்டங்களை குறைப்பதற்கான வரைவு தயாராகிஉள்ளது என்றார்.

4 comments:

  1. தற்போதைக்கு TET ku posting போட வாய்ப்பு இல்லை எனவும் செப்டம்பர் மாதத்தில் pgtrb, குரூப் 4, குரூப் 2வரும் எனவும், தற்போதைக்கு ஆயுள் கால சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும் என்பது seceratrate இல் இருந்து வந்த தகவல், 2013ஆசிரியர் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்திற்கு ஏமாற்றம் மட்டுமே கிடைக்கும்

    ReplyDelete
  2. ஒரு வருடத்திற்கு பிறகு consider panuvangalam posting podava venama nu

    ReplyDelete
  3. நீங்க ஸ்கூல் விரைவில் திறக்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி