மகப்பேறு விடுமுறை வழங்குவதில் பாகுபாடு கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 20, 2021

மகப்பேறு விடுமுறை வழங்குவதில் பாகுபாடு கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

 

மகப்பேறு விடுமுறை வழங்குவதில் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 270 நாட்களாக அதிகரித்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மகப்பேறு விடுப்பு வழங்குவதில் வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறை செய்யப்படாத ஊழியர்களுக்கும் இடையே பாகுபாடு காட்டக்கூடாது. அனைவருக்கும் ஒரே மாதிரி மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

1 comment:

  1. July month before delivery anavangalum pavam avangalukum 1 year koodunga kalvi minister pls arrange

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி