குறுங்கோள் ஆய்வு - அரசு பள்ளி ஆசிரியருக்கு நாசா பாராட்டு ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2021

குறுங்கோள் ஆய்வு - அரசு பள்ளி ஆசிரியருக்கு நாசா பாராட்டு !

 

குறுங்கோள் கண்டு பிடித்த ஆய்வில் ஈடுபட்ட , கிருஷ்ணகிரி ஆசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச விண்வெளி ஆய்வுக்கழகம் , ஹார்டின் - சிமென்ஸ் பல்கலைக்கழகம் , ஹவாய் பல்கலைக்கழகம் ஆகியவை , நாசாவுடன் இணைந்து குறுங்கோள்கள் குறித்த ஆய்வுகளை நடத்தி வருகிறது. இதில் , ஜூலை மாதம் நடந்த ஆய்வில் தமிழக அளவில் , 23 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


இவர்கள் கண்டுபிடித்த , 18 மாதிரிகள் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டன. இதில் , கிருஷ்ணகிரி அருகிலுள்ள ஜாகிர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் சங்கர் ஆய்வு மாதிரியை சமர்ப்பித்துள்ளார். இவரின் ஆய்வை பாராட்டி , நாசா பாராட்டு சான்று வழங்கியுள்ளது . இதையடுத்து ஆசிரியர் சங்கருக்கு , பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபால் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி