ஆசிரியர்களுக்கு விரைவில் பொதுமாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல் - kalviseithi

Aug 15, 2021

ஆசிரியர்களுக்கு விரைவில் பொதுமாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்

பள்ளி திறப்பிற்கு முன்பாக ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 


நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் சிறந்து விளங்கிய சாரண சாரணிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் கொரோனோ இரண்டு தவணைத் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தப்படாத ஆசிரியர்களின் விவரங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் சார்பில் திரட்டப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக சுகாதாரத் துறை உதவியுடன் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கொரனோ காலகட்டத்தில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன நிலையில் பாடத்திட்டங்கள் 50 முதல் 65 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன. பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டாலும் மாணவர்கள் அடிப்படையில் தெரிந்து கொள்ளத் தேவையான அனைத்து பாட பகுதிகளும் ஆசிரியர்களின் சார்பில் கற்றுக் கொடுக்கப்படும். 


கொரனோ காலகட்டத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாத நிலையில் விரைவில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


இந்நிகழ்ச்சியில் மாநில முதன்மை ஆணையர் இளங்கோவன், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் காகர்லா உஷா, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் கலந்து கொண்டனர். மேலும் மாநிலங்கள் முழுவதுமுள்ள சாரண சாரணிய மாணவ மாணவியர்கள் இதில் பங்கேற்றனர்

27 comments:

 1. Replies
  1. நோ, ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் 😄😄

   Delete
  2. July இறுதிககுள் நடத்தி முடிக்கப்படும். என்று மேமாதத்தில் சொன்னது....பதவிக்குன்னு வந்துட்டா எறும்புகூட எருமை ஆகிவிடுகிறது

   Delete
 2. viraivil ku artham mattum puriyave mateangithu

  ReplyDelete
 3. aama aama viraivil 2023 la nadathiduvom

  ReplyDelete
  Replies
  1. அவ்ளோ விரைவில் இல்ல... கொஞ்சம் லேட்டாகும்...
   2025க்குள்ள நடக்கலாம் 😄😄

   Delete
 4. Part2 செங்கோட்டையன்

  ReplyDelete
 5. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

  ReplyDelete
 6. ஜூலை என்றார்கள்... விரைவில் என்கிறார்... அடுத்த மாதம் மிக விரைவில் என்பார்...
  கல்வித்துறையில் அடிமைகளாக ஆசிரியர்கள் இருப்பது வேதனையாக உள்ளது.

  நேற்று வரை 100% பாடங்கள்
  இன்று 50-65% பாடங்கள்
  நாளை அனைவரும் தேர்ச்சி

  ஆசிரியர்களை அவமானப்படுத்தும் சங்கங்கள் வேறு...

  ReplyDelete
 7. நாராயணா கொசு தொல்லை தாங்கலடா

  ReplyDelete
 8. Respected Minister sir, kindly avoid word VIRAIVIL, bcoz already we heard 10 years the same word many times. This word is very Boring.

  ReplyDelete
  Replies
  1. அந்த பைத்தியமே தேவலாம் போல...

   Delete
 9. நேற்று இல்லை. இன்றும் இல்லை.நாளை.....?

  ReplyDelete
 10. விரைவில் என்பது தமிழக அரசியலில் சாதாரண வார்த்தை ஆகிவிட்டது.

  ReplyDelete
 11. Vadivelu - vaai mattum than vela seiyuthu
  Maththathu ellam apdiye irukku

  ReplyDelete
  Replies
  1. செம்ம....
   தலைவர் டயலாக் எல்லா situationக்கும் ஃபிட் ஆகும் 😄😄😄

   Delete
 12. நல்ல உருட்டு டா

  ReplyDelete
 13. அட பாவிகளா நாசமா போயிருவேங்கடா விரைவில்?

  ReplyDelete
 14. முதலில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு பணி அமர்த்தி விட்டு கலந்தாய்வு நடத்த வேண்டும்...

  ReplyDelete
 15. Part time teacher ku kaladhivu pannuga plz...

  ReplyDelete
 16. sir please posting illanakuda sonna ok but VIRAIVIL mattum sollathinga minister sir please mudiyala..

  ReplyDelete
 17. PG வேகன்ட் லிஸ்ட் இருக்கா

  ReplyDelete
 18. Pls conduct gereral counselling immediately minister sir...
  We are suffering past 3 years...pls consider.

  ReplyDelete
 19. When do we have counselling....for teachers transfer😭

  ReplyDelete
 20. விரைவில் என்றால் எப்போழுது?.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி