அரசு ஊழியர்கள் மக்கள்‌ விரோத சக்தியா?- நிதியமைச்சர் பேச்சைத் தரப்படுத்துக: அரசு ஊழியர் சங்கம் கண்டனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2021

அரசு ஊழியர்கள் மக்கள்‌ விரோத சக்தியா?- நிதியமைச்சர் பேச்சைத் தரப்படுத்துக: அரசு ஊழியர் சங்கம் கண்டனம்

 

தவறான இட்டுக்கட்டு செய்தியைப் பரப்பி மக்களைத் திசை திருப்பும்‌ செயலை நிதி அமைச்சர்‌ நிறுத்திக்‌கொள்ள வேண்டும்‌. தமிழக முதல்வர் இதுபோன்று அரசு ஊழியர்‌, ஆசிரியர்களுக்கு எதிராகப் பேசிவரும்‌ நிதியமைச்சரின்‌ பேச்சினையும்‌, செயலினையும்‌ தரப்படுத்த வேண்டும் என்று என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:


''தமிழகத்தில்‌ ஆட்சி மாற்றத்தால் அரசு ஊழியர்‌, ஆசிரியர்கள்‌ நெஞ்சம்‌ நெகிழத்‌ தேவையில்லை. வஞ்சம்‌ இன்னும்‌ மாறவில்லை எனத் தோன்றுகிறது. நிதி அமைச்சர் அரசு ஊழியர்‌, ஆசிரியர்களைப் பற்றி சட்டப்பேரவையிலும்‌, ஊடகங்களிலும் அவதூறாகப் பேசிவருகிறார். அரசு ஊழியர்‌, ஆசிரியர்களை மக்களுக்கெதிராகத் திசை திருப்பும்‌ வகையில்‌ ஏளனமாகவும் பேசி வருகிறார்‌.

மேலும்‌ தமிழக அரசின்‌ நிதி அறிக்கையில்‌ நிதி வருவாயில்‌ ஒரு ரூபாயில்‌ 19 பைசா ஊதியத்திற்காகவும்‌, 8 பைசா ஓய்வூதியத்திற்காகவும்‌ செலவிடப்படுகிறது என்ற புள்ளிவிவரத்தை அளித்துவிட்டு ஊடகங்களில்‌ 1 ரூபாயில்‌ 65 பைசா ஊதியம்‌, ஓய்வூதியத்திற்காகச் செலவிடப்படுகிறது என்ற தவறான விவரங்களைப் பொது வெளியில்‌ தெரிவித்து அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌ மக்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்க முயன்று வருகிறார்‌.

எனவே, தமிழக அரசாங்கம்‌ மத்திய அரசிடமிருந்து கூடுதல்‌ நிதி பெறுவது, அதைத்‌ தொடர்ந்து முறையாக வரி வசூலிப்பது மற்றும்‌ தமிழக அரசின்‌ நிதி நிலைமையைச் சீராக்க சாத்தியமான வழிவகைகளை ஆராயாமல்‌ அரசு ஊழியர்‌, ஆசிரியர்களின்‌ சம்பளம்‌ மற்றும்‌ ஓய்வூதியம்‌ தொடர்பாக நிதி அமைச்சர்‌ தொடர்ந்து தவறான தகவல்கள்‌ மட்டுமின்றி செய்தி வெளியிட்டு வருவதைத் தமிழ்நாடு அரசு ஊழியர்‌ சஙகம்‌ வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசும்‌ அரசு ஊழியர்‌, ஆசிரியர்களின்‌ நியாயமான கோரிக்கைகளையும்‌, தங்களது தேர்தல்‌ வாக்குறுதியினையும்‌ வெளிப்படைத்‌ தன்மையுடன்‌ பரிசீலித்து கோரிக்கைகளை / வாக்குறுதிகளை மொத்தமாக இல்லாவிடினும்‌ கூடுமான அளவில்‌ நிறைவேற்றும்‌ சூழல்‌ ஏற்படவேண்டும்‌ என்று விரும்புகிறோம்‌. அப்போதுதான்‌ அரசு நிர்வாகமும்‌, மக்கள்‌ திட்டப் பணிகளும்‌ தொய்வின்றி நடக்கும்‌, சமூகத்தில்‌ நலமும்‌ வளமும்‌ செழிக்கும்‌.

மேலும்‌, இன்றைய உலகமயமாக்கல்‌ சூழலில்‌ அதிகரித்துவரும்‌ விலைவாசி உயர்வு, பணவீக்கம்‌ ஆகியவற்றோடு இன்றைய பேரிடர்க்‌ காலத்தில்‌ அரசு ஊழியர்‌, ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மேலும்‌ அதிகரிக்கும்‌ என்று ஊடகங்களில்‌ உண்மைக்கு மாறான கருத்துத் திணிப்பு பரவலாக நிதி அமைச்சரால்‌ முன்னெடுத்துச்‌ செல்லப்படுகிறது.

அதே நேரத்தில்‌ வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ள நிதி அமைச்சர்‌, அரசு ஊழியர்‌, ஆசிரியர்களின்‌ ஊதியம்‌-ஓய்வூதிய செலவினம்‌ குறைந்து சுருங்கி வருவதும்‌, மானிய செலவினம்‌ உயர்ந்து வருவதைப் பின்வருமாறு தெரிவித்துள்ளார்‌.

2006-07-இல்‌ மொத்த வருவாய்‌ செலவினத்தில்‌ சம்பளம்‌ மற்றும்‌ ஊதியங்கள்‌ 27.95 சதவீதமும்‌ ஓய்வூதியம்‌ மற்றும்‌ ஓய்வுக்காலப்‌ பலன்கள்‌ 14.22 சதவிகிதமாக இருந்த நிலையில்‌ 2020-21-இல்‌ முறையே 24.92 சதவீதம்‌ மற்றும்‌ 10.50 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதில்‌ கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவெனில்‌, 2009 மற்றும்‌ 2017-இல்‌ ஊதியக்குழு பரிந்துரையின்‌ பேரில்‌ ஊதிய மாற்றத்திற்குப் பிறகும்‌ இது கணிசமாகக் குறைந்துள்ளது. நிதித்துறையின்‌ வெள்ளை அறிக்கையில்‌ அட்டவணை 41-இல்‌ இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில்‌ மானியங்கள்‌ 12.65 சதவீதத்திலிருந்து 19.33 சதவீதமாக உயர்ந்துள்ளன.

எனவே நிதி அமைச்சர்‌ குறிப்பிட்டுள்ளபடி தமிழ்நாட்டின்‌ நிதிச்சுமை மற்றும்‌ அளவற்ற கடன்‌ சுமைக்கு எவ்வகையிலும்‌ அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ ஒய்வூதியதாரர்கள்‌ காரணமல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்‌. எனவே இதுபோன்ற தவறான இட்டுக்கட்டு செய்தியைப் பரப்பி மக்களைத் திசை திருப்பும்‌ செயலை நிதி அமைச்சர்‌ நிறுத்திக்‌ கொள்ள வேண்டும்‌.

மத்திய அரசின்‌ தவறான பெருளாதாரக் கொள்கைகளும்‌, நிதிப் பங்கீடும்‌ மாநில அரசுகள்‌ நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்‌ நிலைமைக்கு ஆட்படுத்தியுள்ளன என்பதை அரசு ஊழியர்‌, ஆசிரியர்கள்‌ அறியாதவர்கள்‌ அல்ல. அரசு ஊழியர்‌, ஆசிரியர்களுக்கான ஊதியச்‌ செலவு அரசின்‌ நலத்திட்டங்கள்‌ மற்றும்‌ வளர்ச்சித்‌ திட்டங்களை மக்களிடம்‌ கொண்டு செல்வதற்கான முதலீட்டுச்‌ செலவு என்ற அடிப்படையில்‌ ஊதியச் செலவிற்கான செலவுகளை ஈடுகட்டுவதற்கு மத்திய அரசிடமிருந்து கூடுதலான நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு பெறுவதற்கான நிர்வாகம்‌ மற்றும்‌ அரசியல்‌ ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.‌ அவ்வாறான நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு அரசு ஊழியர்‌ சங்கம்‌ உறுதுணையாக இருக்கும்‌.

எனவே தமிழக முதல்வர் இதுபோன்று அரசு ஊழியர்‌, ஆசிரியர்களுக

9 comments:

  1. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பல வருடமாக கிடப்பில் கிடக்கும் சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
    Replies
    1. Bro enna ithu main subjects ke vaippu irukuma theriyala ithula neenga vera

      Delete
  2. அரசு வேலை கிடைத்ததால் போதும் என்று நினைக்கிறோம். கிடைத்தால் ஊதியம் குறைவாக இருக்கிறது அதிக ஊதியம் வேண்டும் என்று நினைக்கிறோம்..... தனியார் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இரண்டு வருடமாக ஊதியமில்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களை பற்றி சிந்தித்து உண்டா ? பெயருக்காக அரசுக்கு கொரோனா நிதி கொடுத்தீர்கள். அண்டை வீட்டில் தேவைகளோடு இருந்தவர்களை பற்றி சிந்தித்து உண்டா? சிந்திப்பீர்... செயல்படுவீர். .. வேலை வாய்ப்பை உருவாக்க அரசுக்கு அழுத்தம் கொடுப்பீர்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் சிந்தனை நன்றாக உள்ளது.ஆனால் பயனில்லை.

      Delete
  3. Respected finance minister, you terminate all govt staffs from OA to chief secretary, too much of money save to Govt.

    ReplyDelete
  4. அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ptr ஐ பார்த்து வாக்கு அளிக்கவில்லை எனவே முதலவர் அவர்கள் தேர்தல் வாக்குரிதிகளை உடனே நிரவேத்த வேண்டும் இல்லை எணில் ஆட்சியை விட்டு கண்யத்தோடு விலக வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Ellathayum udane seiya mudiyathu 5 years la seiyaratha than pechu so 5 years kalichu nallaruntha again dmk varattum illati admk varattum

      Delete
  5. Lanjam vangama kudukara kasuku vela senja makkal kuda nippanga enna pamdrathu apdi vela senja epdi sekaram ellathayum sampathikarathu
    Lanjam kudukama sathikalam nu nenacha venumne alaya vidranga
    Arasu uliyar onnum kadavul illanu avangala Nampa vaika mudiyala

    ReplyDelete
  6. தி.மு.க.வுக்கு விடிவு காலம் கிடைத்துவிட்டது. ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு இந்த அரசிலும் விடிவுகாலம் வரவில்லை.வராது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி