நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2021

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

 

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஆக.10ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒருங்கிணைந்த நுழைவு தேர்வாக ‘நீட்’ உள்ளது. இந்திய மருத்துவ குழுமம் சட்டம் - 1956 மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948-ல், கடந்த 2018-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு, இந்த நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. அகில இந்திய மருத்துவ குழும இடைநிலை கல்வி வாரியத்தால் இத்தேர்வு நடத்தப்பட்டது. 2019-ம் ஆண்டு முதல் இந்த நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.


மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 13-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 6-ம் தேதி வரை நீட்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 10ஆம் தேதிவரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்டு 10 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 10 இரவு 11.50 மணி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி