அரசு ஊழியர்களின் உரிமைகளை வழங்குவதை தாமதப்படுத்துவது நியாயமல்ல - ராமதாஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2021

அரசு ஊழியர்களின் உரிமைகளை வழங்குவதை தாமதப்படுத்துவது நியாயமல்ல - ராமதாஸ்

 

அரசு ஊழியர்களின் உரிமைகளை வழங்குவதை தாமதப்படுத்துவது நியாயமல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு, ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஏற்காதது அவர்களைப் பெரும் சங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது.


தமிழக அரசு நிர்வாகத்தில் முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களுடைய உரிமைகளை வழங்குவதில் தாமதப்படுத்துவது நியாயம் கிடையாது. எனவே 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார்.



10 comments:

  1. டாக்டர் அய்யா சொல்வது நடக்காது, இது தமிழகத்தின் சாபக்கேடு...
    இதுவரை கல்வியை மதிக்கும் அமைச்சர்கள் வாய்க்கவில்லை திராவிட ஆட்சியில்...
    மதுப் பிரியர் முதல் போலி பஸ் டிக்கெட் போக்குவரத்து துறை நடத்திய நபர் வரை தொடர்ந்து கொண்டே உள்ளது...

    ReplyDelete
  2. இது தி.மு.க வின் தேர்தல் வாக்குறுதி நிதி அமைச்சரின் அறிக்கைக்கு முதல்வர் மெளனம் காக்கக் கூடாது .அனைத்து கட்சிகளும் அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்

    ReplyDelete
  3. டாக்டர் ஐயா முதல்வரானால்தான் அரசு ஊழியர்களுக்கு நல்லது நடக்கும்.

    ReplyDelete
  4. ஐயா சொல்வது உண்மைதான்.முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  5. ஆசிரியைகள் வேலைக்கு வயது வரம்பு நிக்கா வேண்டும்

    ReplyDelete
  6. Ayya neengal first vaika vendiya korikai, retairement age ah 58 panna sollunga. Salary patri appuram pesunga. Plz. Thagadur Dhanapal.

    ReplyDelete
  7. Iam not pmk but ramadoss ஐயா சொல்வது 100 சதவீதம் உண்மை

    ReplyDelete
  8. *2003 இல் CPS திட்டம் அறிமுகப் படுத்திய போது மும்பை பங்குச் சந்தையில் BSE SENSEX 2,904 புள்ளிகளாக இருந்தது !!!. இன்று BSE SENSEX 56,198 புள்ளிகளாக உள்ளது !!!. 2003 இல் இருந்து CPS திட்டத்தில் பிடித்தம் செய்யப் பட்ட ஊழியர்களின் பங்கு தொகையை அரசின் பங்குத் தொகையுடன் NPS திட்டத்தில் PFRDA விடம் செலுத்தியிருந்தால் அது எத்தனை மடங்காக உயர்ந்து நமது ஒவ்வொருவருடைய கணக்கில் எத்தனை இலட்சம் இருக்க வேண்டும் என ஒரு சிறு கணக்கு பாருங்கள் !!!. மேலும் NPS திட்டத்தில் அரசின் பங்குத் தொகை 14 % என்பது குறிப்பிடத்தக்கது !!!. NPS திட்டத்தில் PART FINAL LOAN பெறும் வசதி உண்டு !!!. NPS திட்டத்தில் DCRG உண்டு !!!. NPS திட்டத்தில் ஓய்வூதியம் உண்டு !!!. NPS திட்டத்தில் சேராமல் CPS திட்டத்தில் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு !!!. 18 ஆண்டுகளாக நம்மை ஏமாற்றி முட்டாள்கள் ஆக்கியது தமிழக அரசு மட்டுமல்ல, சங்கங்களும் தான் !!!. தமிழக அரசே ஊழியர்களின் பங்களிப்பு தொகையை உடனடியாக PFRDA விடம் ஒப்படைக்க நடவடிக்கை எடு !!!.*

    *மெத்த படித்த தமிழக நிதியமைச்சர் GPF வழங்க இனி எப்போதும் வாய்ப்பு இல்லை !!!. நிதிநிலை சரியான பின் ஏதோ ஒரு ஓய்வூதியம் வழங்க முயற்சி எடுக்கப் படும் என்கிறார் !!!. முதலமைச்சர் மௌனமாக அதை ஆமோதிக்கிறார் !!!. இது NPS இல் வழங்கப் படுவது போன்ற ஒரு வகையான பகட்டு ஏமாற்று திட்டமாகவே அமையும் !!!. இது நிச்சயம் மத்திய அரசின் NPS யை விட மோசமான ஒரு ஓய்வூதிய திட்டமாகவே அமையும் !!!.*

    *இந்தியாவில் அரசு ஊழியர்கள் வஞ்சிக்கப்பட்ட ஒரே மாநிலம் தமிழகம் !!!. ஆனால் அரசு ஊழியர்களுக்கு ஏதோ அள்ளி வழங்குவது போல் திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டு ஒரு மாயையை உருவாக்குகின்றன !!!.*

    *18 ஆண்டுகளாக GPF ம் இல்லாமல் NPS ம் இல்லாமல் DCRG, ஓய்வூதியம் எதுவுமே இல்லாமல் ஓய்வு பெற்றவர்கள் கூலி வேலை செய்து பிழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள இந்தியாவின் ஒரே மாநிலம் தமிழ்நாடு !!!. NPS திட்டத்தில் சேர்ந்து PFRDA விடம் பணத்தை செலுத்தி இருந்தால் ஓரளவு நமது பணத்திற்கு பாதுகாப்பு இருந்து இருக்கும் !!!. அகவிலைப்படி தர நிதி இல்லை என்று சொல்லும் தமிழக அரசு CPS யில் நாம் கட்டிய பங்கு தொகை மற்றும் அரசின் பங்கு தொகை வட்டியுடன் சேர்த்து சுமார் 50 இலட்சம் கோடி என்ன ஆனது என்று தமிழக அரசு நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடாதது அரசு ஊழியர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது !!!. NPS திட்டத்தில் சாராமல் CPS என்னும் போலி திட்டத்தில் தொடரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே !!!. NPS திட்டத்தில் அரசின் பங்களிப்பு 14 % என்பது எத்தனை சங்க தலைவர்களுக்கு தெரியும் !!!. NPS திட்டத்தில் ஓய்வூதியம் உண்டு, PART FINAL, LOAN பெற முடியும், DCRG உண்டு !!!. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அதிசய CPS திட்டத்தில் மேற் சொன்ன எதுவுமே கிடையாது !!!. இன்று ஓய்வூதிய தொகை வழங்க துப்பில்லாமல் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை தள்ளி போடும் தமிழக அரசு CPS திட்டத்தில் நாம் செலுத்துகின்ற பங்களிப்பு தொகையை திரும்ப தருவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது ?. 18 ஆண்டுகளாக ஏமாந்தது போதும் !!!. NPS திட்டம் கேட்டு நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுவோம் !!!. PFRDA விடம் பங்களிப்பு தொகையை வட்டியுடன் சுமார் 50 ஆயிரம் கோடியை செலுத்த துப்பில்லாத தமிழக அரசு GPF திட்டத்திற்கு மாற வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப் படும் !!!.*

    *NPS திட்டத்திற்கு மாறினால் மகிழ்ச்சி !!!. GPF திட்டத்திற்கு மாறினால் இரட்டிப்பு மகிழ்ச்சி !!!.*

    *போதும் ! போதும் !!, 18 ஆண்டுகள் ஏமாந்தது போதும் !!!. வேண்டவே வேண்டாம் !! கொரோனாவை விட கொடிய CPS வேண்டாம் !!!.*
    SRM... பகிர்வு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி