JEE தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2021

JEE தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு.

 


ஜேஇஇ முதல்நிலை 4-ம்கட்டதேர்வுக்கான ஹால் டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டமாக நடத்தப்படும்.


இதில் முதல்நிலை தேர்வு, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான முதல் மற்றும் 2-ம்கட்ட தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச்சில் நடத்தப்பட்டு, முடிவு வெளியிடப்பட்டது. ஏப்ரலில் நடக்க இருந்த 3-ம் கட்டதேர்வு, கரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்டு ஜூலை 20 முதல்27 வரை நடத்தப்பட்டு, ஆக.6-ல்முடிவு வெளியிடப்பட்டது.

4-ம்கட்ட தேர்வுகள் கணினிவழியில் ஆகஸ்ட் 26, 27, 31, செப்டம்பர் 1, 2-ல் நடக்க உள்ளன.

இந்நிலையில், ஹால் டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது. மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில்இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதில் சிரமம் இருந்தால்011-40759000 என்ற தொலைபேசி எண், jeemain@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி