நாளை (20.09.2021) நடைபெறவிருந்த BRTE இடமாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2021

நாளை (20.09.2021) நடைபெறவிருந்த BRTE இடமாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வித்துறை

 

நாளை (20.09.2021) நடைபெறவிருந்த BRT இடமாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!


500 பள்ளிக் கல்வித் துறையில் 2021-2022ம் கல்வி ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்டத் திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்குப் பணிமாறுதல் / பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்பாக பார்வை ( 1 ) ல் கண்டுள்ளபடி நெறிமுறைகள் வகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


முதல் கட்டமாக ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிமாறுதல் கலந்தாய்வு 15.09.2021 அன்று நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி பொது மாறுதல் கலந்தாய்வினை 20.9.2021 அன்று நடத்திடத் திட்டமிட்டு பார்வை -2 ல் காணும் செயல்முறைகள் வாயிலாக அறிவுரைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 


தற்போதைய நிலையில் நிருவாகக் காரணங்களின் அடிப்படையில் 20.9.2021 அன்று நடைபெறவிருந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுகிறது . பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி