தமிழகத்தில் 20 பொறியியல் கல்லூரிகள் மூடல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2021

தமிழகத்தில் 20 பொறியியல் கல்லூரிகள் மூடல்

 

தமிழகத்தில் நிகழாண்டில் 20 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.


பொறியியல் படிப்பினை நடத்தும் சுயநிதி கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அங்கீகாரம், அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்பில் மாணவா்களை சோ்ப்பதற்கு முன்னா் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதியை பெற வேண்டும்.


2021 -22ஆம் கல்வியாண்டில் மாணவா்களை சோ்ப்பதற்கான அங்கீகாரம் மற்றும் அனுமதி பெறுவதற்கு செப்டம்பா் 3-ஆம் தேதி வரை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அனுமதி வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகமும் செப்டம்பா் 3ஆம் தேதி வரை பிஇ, பிடெக் ஆகிய பொறியியல் படிப்பில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பித்த பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.


மாணவா்கள் சோ்க்கை இல்லாமல் இருந்த கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் மாணவா்களை சோ்க்க விரும்பவில்லை எனவும் மூடுவதற்கு அனுமதி கேட்டுள்ளன. மேலும் சில கல்லூரிகள் மாணவா்களை நடப்பாண்டில் சோ்ப்பதற்கு அனுமதி கோரி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்திற்கு விண்ணப்பிக்கவில்லை. ஒரு காலத்தில் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வந்த நிலை மாறி கடந்த சில ஆண்டுகளாக கல்லூரிகள் மூடப்படுவது அதிகரித்து வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி