3 பல்கலை. தொலைதூரக் கல்வியில் 25 புதிய படிப்புகளுக்கு யுஜிசி ஒப்புதல் - kalviseithi

Sep 4, 2021

3 பல்கலை. தொலைதூரக் கல்வியில் 25 புதிய படிப்புகளுக்கு யுஜிசி ஒப்புதல்

 

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 3 அரசு பல்கலைக்கழகங்களில் தொலைதூரக் கல்வி முறையில் 25 புதிய படிப்புகளுக்கு யுஜிசி ஒப்புதல்  வழங்கியுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்துவகையான பல்கலைக்கழகங்களும் புதிய பட்டப் படிப்புகளை தொடங்க பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) முறையான அனுமதி பெறவேண்டும். அதன்படி, தொலைதூர படிப்புகளை தொடங்க பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி கடந்த மார்ச் மாதம் அனுமதி வழங்கியிருந்தது.


இந்நிலையில், தொலைதூரக் கல்வி முறைக்கு நாடு முழுவதும்கூடுதலாக 11 பல்கலைக்கழகங்களில் 74 படிப்புகளுக்கு யுஜிசி ஒப்புதல்  வழங்கியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் திருநெல்வேலியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 5 இளநிலை, 5 முதுநிலை என 10 படிப்புகளுக்கும், சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு இளநிலை, 2 முதுநிலை என 3 படிப்புகளுக்கும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 8 இளநிலை, 4 முதுநிலை என12 படிப்புகளுக்கும் யுஜிசி தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்களை யுஜிசி இணையதளத்தில் (https://www.ugc.ac.in) தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி