பிரகதி திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.50,000 உதவித்தொகை – நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2021

பிரகதி திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.50,000 உதவித்தொகை – நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்!

 

பிரகதி திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவிகள் 2021 – 2022ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.


கல்வி உதவித்தொகை:


இந்தியாவில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகளை பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்கள் பள்ளி கல்வியோடு நிறுத்தி விடாமல் உயர்கல்வியை தொடர அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பிரகதி திட்டத்தின் கீழ் பொறியியல் படிப்புகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற பொறியியல் முதலாமாண்டு மாணவிகள் டிப்ளமோ முடித்துவிட்டு நேரடியாக இரண்டாம் ஆண்டு சேரும் போது விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகையானது மாணவிகளின் 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் கூட இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இந்த பிரகதி திட்டத்தின் கீழ் மாணவிகள் உதவித்தொகை பெற சில நிபந்தனைகளும் உள்ளது.


அதன்படி பிரகதி திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவிகளின் குடும்ப வருமானம் 8 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியும். பிரகதி திட்டத்தில் தேர்வாகும் மாணவிகளுக்கு உதவித்தொகையாக 4 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவிகள் உரிய ஆவணங்களுடன் நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி