BE - பொறியியல் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2021

BE - பொறியியல் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு.

 


சிறப்பு பிரிவு கலந்தாய்வு செப்.17-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டைவிட 11,284 இடங்கள் குறைந்துள்ளன.

தமிழகத்தில் உள்ள பொறியியல்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து முதல்கட்டமாக, அரசுப் பள்ளிமாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு செப்.17 முதல் 24-ம் தேதி வரையும், பொதுப் பிரிவு கலந்தாய்வு  செப்.27 முதல் அக்.17-ம் தேதி வரையும் நடக்க உள்ளன.


440 கல்லூரிகள் பங்கேற்பு

தமிழகத்தில் இந்தக் கல்வி ஆண்டில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. அதன்படி, 1 லட்சத்து51 ஆயிரத்து 870 இடங்கள் மட்டுமேகலந்தாய்வுக்கு கிடைத்துள்ளன. கடந்த ஆண்டில் 461 கல்லூரிகளில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் கலந்தாய்வுக்குக் கிடைத்தன.

இதனால் கடந்த ஆண்டைவிட தற்போது 11,284 இடங்கள்குறைந்துள்ளன. விண்ணப்பித்தவர்களைவிட இடங்கள் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி