தமிழக பள்ளிகளை முழுமையாக திறக்க முழு வீச்சில் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2021

தமிழக பள்ளிகளை முழுமையாக திறக்க முழு வீச்சில் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் எப்போது திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது பேட்டி அளித்துள்ளார். இது குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


பள்ளிகள் திறப்பு


தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவலின் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இந்த கல்வியாண்டு தொடங்கி 4 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும், பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கேட்டதால் 9,10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பிள்ளைகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.


இது ஒரு புறம் இருக்க, மற்ற வகுப்பினருக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதனை அடுத்து தற்போது கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நிருபர்களுக்கு இது குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ‘பள்ளிகள் திறப்பு பற்றி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

தொடக்கப்பள்ளிகள் திறப்பது குறித்தும் அனைவரிடமும் ஆலோசனை கேட்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். கூடிய விரைவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முடிவினை தெரிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிகளை முழுமையாக திறக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

7 comments:

  1. Special teachers drawing tamil medium posting podunga

    ReplyDelete
  2. Special teachers Coimbatore corporation drawing and sewing teachers posting podunga please.

    ReplyDelete
  3. please chief minister sir age limit cancel sir

    ReplyDelete
  4. News for School Opening. But comments for posting?

    ReplyDelete
  5. Part time teacher ku nalladhu pannuga unga medhu nanga vatcha trust appudiya irrukutum ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி