அரசின் விலையில்லா நோட்டுகளை பள்ளி நோட்டாக பயன்படுத்திய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை. - kalviseithi

Sep 22, 2021

அரசின் விலையில்லா நோட்டுகளை பள்ளி நோட்டாக பயன்படுத்திய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை.

 

கரூர் மாவட்டத்தில் அரசின் விலையில்லா நோட்டுகளை பள்ளி நோட்டாக பயன்படுத்திய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.கரூர் மாவட்டம் கார்வழி அரசு உயர்நிலைப் பள்ளியினை கரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் 11.09.2021 மாலை 4.00 மணிக்கு நேரடி பார்வை மேற்கொண்டார்.


அப்போது பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கான பள்ளியின் இயக்கப் பதிவேடு ( Movement Register ) அரசின் நலத்திட்டங்களில் ஒன்றான விலையில்லா கட்டுரை ஏட்டினை பயன்படுத்தி எழுதப்பட்டிருந்தது. எழுதுபொருட்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தும் மாணாக்கர்களுக்கு வழங்க வேண்டிய குறிப்பேட்டினை அலுவலகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தியது ஏற்றுக் கொள்ளக்கூடிய செயல் அல்ல. கண்டிக்கத்தக்கது. 


அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளை மீறிய செயலாக கருதப்படுகிறது. எனவே அரசின் விதிகளை மீறிய தங்கள் மேல் ஏன் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள கூடாது என்பதற்கான விளக்கத்தினை 19.09.2021 மாலைக்குள் கரூர் முதன்மைக்கல்வி அலுவலரை நேரில் சந்தித்து ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. யோக்கியன் வருகிறான் சொம்பை தூக்கி உள்ளே வையுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி