சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனம் வழங்க கோரிக்கை! - kalviseithi

Sep 4, 2021

சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனம் வழங்க கோரிக்கை!

 

2009, 2010 ம் ஆண்டுகளில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து இன்னும் பணி நியமனம் வழங்கப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று திருமாவளவன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

TRB பாலிடெக்னிக் தேர்வுக்கு புதிதாக விண்ணப்பிக்க முடியுமா? முழு விபரம் பார்க்க - கிளிக் செய்யவும்....

ஆசிரியர் பணி நியமனம்:


தமிழகத்தில் கடந்த 2009, 2010ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியின் போது பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு இதுவரையில் பணி நியமன ஆணை கிடைக்காமல் 1258 பட்டதாரி தமிழாசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கான பணி நியமன ஆணையை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்று பல அரசியல் கட்சி தலைவர்களும் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது, இது குறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.


அறிக்கையில், கடந்த திமுக ஆட்சியின் போது பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் பதிவு மூப்பு முறையில் நடைபெற்று வந்தது. 2009, 2010 ஆம் ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அப்போது சான்றிதழ் சரிபார்க்கும் படியினை முடித்து விட்ட 5000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1258 பட்டதாரி தமிழாசிரியர்கள் இன்னும் பணிநியமனம் செய்யப்படவில்லை. பின்னர், அதிமுக அரசு ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதி தேர்வு முறையினை அமல்படுத்தினார்.


இதனால் இந்த ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து தங்களுக்கு விலக்கு பெற்றனர். இருப்பினும், இத்தனை ஆண்டுகளாக அவர்களுக்கு பணி நியமனம் வழங்குவது குறித்து அரசு அறிவிக்கவில்லை. இதனால் இவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும், பணி நியமன ஆணையினை வழங்கி அவர்களுக்கு உதவி செய்திட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த பணி நியமனம் தொடர்பாக இவர் இதற்கு முன்னரும் அரசுக்கு கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

10 comments:

 1. பணி நியமனம் வரும் எதிர்பார்த்து காத்திருந்த எங்களை அதிமுக அரசு அலட்சியபடிதியது . எங்களுடைய பணிக்காலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பத்து வருடங்கள் முடிந்துவிட்டது இனி இருக்கும் 10 வருடம் பணி நியமனம் கிடைக்கும் என்ற எக்கதொடயே கழிஞ்சுடும் என்று இருந்த எங்க வழ்கைகாக திருவாய் திறந்த மாண்புமிகு திரு திருமாவளவன் அவர்களை மணமாற வணங்குகிறேன். பணி நியமனம் கிடைத்தால் சந்தோசம். இல்லை என்றால்.... பழகிடுசு....

  ReplyDelete
 2. தமிழ்நாட்டில் இரு திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் முதலில் கொள்கை முடிவு என்று ஆசிரியர் நியமனத்தில் விளையாடுவது வாடிக்கை ஆகிவிட்டது. இன்னும் எத்தனை ஆசிரியர் படிப்பு படித்தவர்களை பலி வாங்க போகிறார்களோ......

  ReplyDelete
 3. Tn govt first give appointments to seniority wise for 2013 TET passed out and certificate verification completed candidates( BT Assistant)

  ReplyDelete
 4. sir nan det mutithulean,naanum 2009 la cv ponean but innum job ....

  ReplyDelete
 5. தமிழக அரசு அலுவலகமான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 15 வருடங்களுக்கு மேலாக அரசு வேலைக்காக காத்திருந்து 2010ல் பதிவுமூப்பு அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பினை முடித்து பணி நியமன ஆணைக்காக காத்திருக்கிறோம். தயவு செய்து தமிழக அரசு அலுவலகத்தை நம்பியுள்ள எங்களை ஏமாற்றாமல் முதலில் எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவீர்கள் என்று நம்புகிறோம்.

  ReplyDelete
 6. Thank you Dr.Thol Thirumavalavan sir for showing concern towards us (CV completed BTS).

  ReplyDelete
 7. Tet 2013 pathi yarum vai thirdhu pesamatranga y

  ReplyDelete
 8. சிறப்பு ஆசிரியர்களுக்கு எப்போது பணி நியமனம் செய்வீர்கள் serapu ஆசிரியர் படித்தவர்கள் அனைவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்

  ReplyDelete
 9. ஆசிரியர் வேலைக்கு படிக்ரதவிட நாலு எருமை மாடு வாங்கி மேய்க்கலாம் . அப்பவாவது தன்மானம் போகாம இருக்கும்

  ReplyDelete
 10. This govt is 1000 ℅ fraud government. Don't belive this type of stupid government.....


  One to one linked.....

  So c your future in anther way still u get govt job ok.....

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி