முதல்வரின் தனிப்பிரிவில் மனு எவ்வாறு அளிக்க வேண்டும் - அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2021

முதல்வரின் தனிப்பிரிவில் மனு எவ்வாறு அளிக்க வேண்டும் - அரசு அறிவிப்பு.

 

முதல்வரின் தனிப்பிரிவில் அளிக்கப்படும் பெரும் பாலான மனுக்கள் ஒரு குறிப்பிட்ட படிவத்தில்தான் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அளிக்கப்பட வேண்டும் என்ற தவறான வதந்தி மக்களிடையே சில தனிப்பட்ட நபர்களால் பரப்பப்பட்டு வருவதாகவும் , அதை நம்பி மனுக்களை அளிக்க வரும் பெரும்பாலான பொதுமக் கள் குறிப்பிட்ட படிவங்களை பணம் கொடுத்து வாங்கி மனுக்களை அளித்து வருவதாகவும் செய்திகள் அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முதல்வரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க எவ்வித குறிப்பிட்ட படிவமும் அரசால் பரிந்துரைக்கப்பட வில்லை.


மேலும் , மனுக்களை அளிக்க வரும் பொதுமக் கள் , ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் கோரிக்கைகளை எழுதி தேவைப்படின் உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அளித்தாலே போதுமானது. முதலமைச்சரின் தனிப்பிரிவில் பல்வேறு வழிகளில் பெறப்படும் ( தபால் / இணையதளம் 

www.cmcell.tn.gov.in / முதலமைச்சர் உதவி மையம் ( cmhelp line.tnega.org ) மற்றும் மின்னஞ்சல் ( cmcell@tn.gov.in ) அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க ஒரே மாதிரியான நடைமுறையே பின்பற்றப்படும்.

11 comments:

  1. முதல்வர் தனிப்பிரிவுக்கு நம் ஒன்றுகேள்வி கேட்டால் அதற்கு வேற பதில் தருகிறார்கள்

    ReplyDelete
  2. உடனே கோரிக்கையை நிவர்த்தி செய்து விடுவார்...?

    ReplyDelete
  3. பல முறை சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள் என்று மனு அனுப்பி வைத்தோம்,,,,,ஆசிரியர் தேர்வு வாரியம் முகவரிக்கும் அனுப்பி வைத்தோம்,,,,,இன்று வரை பணி நியமனம் செய்யவில்லை,,,,அறிவொளி ஐயாவை நேரில் சென்று பார்தோம்,,பதில் இல்லை ,,,மன உளைச்சல் மட்டுமே மிச்சம்,,,,,இது வரைக்கும் மனு மட்டுமமே 50 முறை அனுப்பி இருப்போம்,,,,செங்கோட்டையன் ஐயா அமைச்சராக இருந்ததிலிருந்து போராடுகிறார் சிறப்பாசிரியர்கள் தமிழ் வழியில் உள்ளவர்கள்,,,,அடுத்தது அன்பில் மகேஷ் ஐயா அவர்கள் வந்தார்கள்,,,,அவரிடமும் மனு அனுப்பினோம்,,,,பதில் வரவில்லை,,,சிறப்பாசிரியர்கள் ஓவியம் படித்தவர்களுக்கு பணி இருக்கிறதா இல்லையா என்றாது சொல்லுங்கள்,,,,,,

    ReplyDelete
    Replies
    1. இதுவும் கடந்து போகும் என்று வாழ்ந்து கொண்டிருகிறோம்,,,,என்றாவது ஒரு நாள் எங்கள் கஷ்டம் புரியும்

      Delete
  4. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்கள் கஷ்டம் கல்வி செய்தியில் உள்ள நண்பர்களுக்கு தெரியும்

    ReplyDelete
  5. மிக கொடுமை. சிறப்பாசிரியர்கள் தமிழ் வழி தேர்ச்சி பெற்றவர் நிலை. உண்மையில் கல்வி துறை அதிகாரிகளுக்கு மனசாட்சி இல்லை என்பதே இது உணர்த்துகிறது. இவ்வளவு நாள் எனபது ...... மிக கொடுமை... (விரைவில் பணி நியமனம் பெற இறைவனை வேண்டி கொள்கிறேன்)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா, எங்களுக்கும் குறள் கொடுக்க மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது,,,,,எங்களோடு தேர்வானவர்கள் பணி நியமனம் செய்து நவம்பர் மாதத்துடன் 2 வருடம் ஆக போகிறது,,,,இன சுழற்சி அடைப்படையில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டும் இந்த நிலைமை,,,,இதற்கு நாங்கள் fail ஆகிருக்கலாம்னு தோனுது,,,, fail ஆகிருந்தால் அன்று ஒரு நாளுடன் கஷ்டம் போகிருக்கும்,,,,,,,எவ்வளவு கஷ்டம்,,,சொல்ல முடியாத கஷ்டம் ,,,,

      Delete
  6. Asiriyargle Natin achannigal enpathu yarukkum puriyathu....

    ReplyDelete
  7. Four years continuous partition no action. About Pg trb chemistry 2017

    ReplyDelete
  8. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி