அரசுப் பள்ளிகளில் ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் - kalviseithi

Sep 27, 2021

அரசுப் பள்ளிகளில் ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்


 ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்டத்தை மாவட்டம்தோறும் அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ்  தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் நிறுவனம் சார்பில் ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ என்ற திட்டத்தின் தொடக்க விழா சென்னை தரமணியில் உள்ள மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான திட்டத்தை தொடங்கிவைத்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:


இந்த திட்டம், மாணவர்களுக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாகும். இதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நடப்பாண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இருந்து மாணவர்களை தேர்வு செய்து அடிப்படை அறிவியல் பயிற்சி வழங்கப்படவுள்ளது. அடுத்தகட்டமாக இந்த திட்டத்தை மாவட்டந்தோறும் அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தவும், அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சியுடன் இணைத்து நடத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேசும்போது, ‘‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டம் 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன் பெற்றுள்ளனர்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் உலக சுகதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் (கல்வி) பாரதிதாசன், எம்.எஸ். சுவாமிநாதன் நிறுவனத்தின் தலைவர் மதுரா சுவாமிநாதன், செயல் இயக்குநர் கே.எஸ்.முரளி மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

2 comments:

  1. பணத்தை கொள்ளை அடிப்பதற்கான திட்டம்.

    ReplyDelete
  2. 6 7 8 பள்ளிக் கூடம் திறக்கறது இருக்கட்டும்🤔🤔 .
    அரசுப் பள்ளியில ஆசிரியர் பற்றாக்குறை இருக்கறது தெரியுமா தெரியாதா 😄😄😄

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி