இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்: பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுப்பு; அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2021

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்: பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுப்பு; அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை

 


அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:


நடப்பு கல்வியாண்டு (2021-22) பணியாளர் நிர்ணயம் சார்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) வலைதளத்தில் மாணவர்களின் சேர்க்கை மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன


அதைத்தொடர்ந்து தற்போது எமிஸ் வலைத்தளத்தில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்ய சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஒப்பிட்டு எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


அவ்வாறு பதிவேற்றும்போது கடந்த ஆண்டுகளில் சரண் செய்யப்பட்டிருந்த பணியிடங்களை கணக்கில் கொள்ளக்கூடாது. இந்த பணிகளை உரிய வழிமுறைகளின்படி துரிதமாக முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

17 comments:

  1. Ungalukku vera velai ye illa...

    ReplyDelete
  2. Ada ponga pa..... ore news ah monthly once update panringa....

    ReplyDelete
  3. காலிப் பணியிடங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன....

    காலிப் பணியிடங்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன....

    காலிப் பணியிடங்களின் விவரங்கள் சேகரிக்கப்படும்....

    ஆனால் பணி நியமனம் மட்டும் கிடையாது....

    இப்படிக்கு
    திருடர்கள் தேசம்....
    லஞ்சம் தஞ்சம் அடையும் மாநிலம்....

    ReplyDelete
  4. காலிப் பணியிடங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன....

    காலிப் பணியிடங்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன....

    காலிப் பணியிடங்களின் விவரங்கள் சேகரிக்கப்படும்....

    ஆனால் பணி நியமனம் என்பது மட்டும் கிடையாது....

    இப்படிக்கு
    திருடர்கள் தேசம்....
    லஞ்சம் தஞ்சம் அடையும் மாநிலம்

    ReplyDelete
  5. Fake news. No posting. Already excess teacher is working. Just laugh after reading such bullshit news.

    ReplyDelete
  6. விழங்கிடும்

    ReplyDelete
  7. எங்கள் தலைவன் செங்கொட்டையாண்டி மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் போஸ்டிங்கா போட்டு தள்ளியிருக்கும்..

    ReplyDelete
  8. Less chance only for TET passed candidates to get govt job. No regular salary. Only fixed pay 8,000. No fund in govt hand. Plz wait for 10 more year. Sad for all of us.

    ReplyDelete
  9. ஏற்கனவே 10வருடங்கள் போய்விட்டன.இதில் வயது வரம்பு வைப்பது அநியாயமாக இருக்கிறது.இதனை தற்போதைய அரசு ஆவண செய்ய வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி