ஓய்வூதியர் / குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஓர் நற்செய்தி !!! - kalviseithi

Sep 28, 2021

ஓய்வூதியர் / குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஓர் நற்செய்தி !!!

 


தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க வேண்டுகோளின்படி , தமிழக அரசு கடிதம் எண் . 41800A / FIN ( H1-2 ) / 2020-4 , நிதித்துறை , நாள் 02.09.2021 வெளியிட்டு , அதனை தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்திற்கு பெறுநர் விலாசமிட்டு அனுப்பியுள்ளது.


அதில் , ஓய்வூதியர் காப்பீட்டு திட்டத்தில் காசில்லா சிகிச்சை பெற புதிய நடைமுறையை செயல்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர் மருத்துவமனையில் அனுமதிக்கும்போதே இந்த ToolFree No. 1800-233-5544 எண்ணிற்கு போன் செய்து தான் சிகிச்சையில் சேர்ந்திருப்பதை தெரிவிக்க வேண்டும் . அதேபோல் டிஸ்சார்ஜ் ஆகும் போதும் தெரிவிக்க வேண்டும் . ( இவ்வாறு செய்யும் போது மருத்துவமனையில் பணம் ஏதும் கட்ட வேண்டியது அவசியம் இருக்காது ).


ஒரு வேளை பணம் ஏதும் கேட்டால் , கீழ்க்கண்ட email ID க்கு புகார் செய்து விட்டு ( tnnhis_grievance@india.com ) அதன் நகலை கீழ்கண்ட email ID க்கும் ( 010600@uiic.co.in ) அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி