உயர் நீதிமன்ற உத்தரவினால் பெறப்படும் அபராத /பங்களிப்புத் தொகை - அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு சீரமைக்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Sep 21, 2021

உயர் நீதிமன்ற உத்தரவினால் பெறப்படும் அபராத /பங்களிப்புத் தொகை - அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு சீரமைக்க உத்தரவு.

 

பள்ளிக் கல்வி – உயர் நீதிமன்ற உத்தரவினால் பெறப்படும் அபராத /பங்களிப்புத் தொகை  - அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு சீரமைக்க ஆணை பிறப்பித்தல் – அத்தொகையின்  செலவினம் சார்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!பல்வேறு குற்ற / பிற வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளை ஆணைகளில் பள்ளிகளின் சீரமைப்பு பணிகளுக்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் வங்கிக் கணக்கிற்கு மனுதாரர்களின் அபராத / பங்களிப்பு தொகை செலுத்த ஆணைகள் வழங்கப்பட்டு மேற்சொன்ன தொகைகள் தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலரின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. அவ்வாறு பெறப்படும் தொகையை கொண்டு கீழ்காணுமாறு அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு மிக மிக அவசியமான பணிகளுக்கு செலவிட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 


மிகவும் பழுதடைந்த அல்லது பெண்கள் கழிப்பிடம் இல்லாத பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். 


கழிவறைகளை சீர்படுத்த மற்றும் தூய்மை படுத்த முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.


• இன்றியமையாத குடிநீர் குழாய் இணைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.


• கழிவுநீர் இணைப்பு சரிசெய்தல் , மிக குறைந்த செலவினம் உள்ள மின்சாரம் , கட்டடம் , வளாக தூய்மைப்பணிகள் மற்றும் சுற்றுச்சுவர்களின் ஏற்படும் பழுது மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.

1 comment:

  1. இது நடக்கும் பட்சத்தில் வரவேற்கத்தக்கது..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி