அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Sep 16, 2021

அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியீடு!


ஆணை 

GO NO : 91 ,Date. : 13.09.2021 - Download here...

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் , 13.09.2021 அன்று நடைபெற்ற 2021-2022 - ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையின் போது , கொரோனா பெருந்தொற்று காரணமாக , பணியாளர் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால் , நேரடி நியமன வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படும் என மாண்புமிகு அமைச்சர் , நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது . 


2 மாண்புமிகு அமைச்சர் , நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அவர்களின் மேற்குறிப்பிட்ட அறிவிப்பிற்கிணங்க , பின்வருமாறு ஆணைகள் வெளியிடப்படுகின்றன : i ) அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு , தற்போதுள்ள 30 ஆண்டுகளிலிருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.

4 comments:

 1. What about tet 2013 vacancy?age and Trb vacancy? Any body to know? Pl tell....

  ReplyDelete
 2. My frd 33 age la part time teacher join pannina ippo 43 age aiduchu OC category ...age bar aiduchu... permanent Panna chance irruka kalvi admin

  ReplyDelete
 3. ஆசிரியர்களுக்கான வயது வரம்பு 40லிருந்து 42 ஆக மாற்றம் இல்லையா?

  ReplyDelete
 4. 40 to 42 only. Kalviseithi pls type correctly and send

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி