கல்லூரிகளில் சாதி பாகுபாடு புகார்கள் மீது கடும் நடவடிக்கை: பல்கலை.க்கு யுஜிசி அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2021

கல்லூரிகளில் சாதி பாகுபாடு புகார்கள் மீது கடும் நடவடிக்கை: பல்கலை.க்கு யுஜிசி அறிவுறுத்தல்

 

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களில் பட்டியலினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராகசெயல்படக் கூடாது. வளாகங்களில் எக்காரணம் கொண்டும் சாதிரீதியாக பாகுபாடு காட்டாமல் இருப்பதை கல்வி நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும்.


இதுதவிர சாதி பாகுபாட்டால் பாதிக்கப்படும் மாணவர்கள் புகார் தெரிவிக்க, கல்லூரிகளின் இணையதளத்தில் வசதி ஏற்படுத்தவேண்டும். அவ்வாறு பெறப்படும் புகார்களை விசாரிக்க தனி குழுவைஅமைத்து, அவற்றின் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விவரத்தை யுஜிசிக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும்.

அதேபோல், சாதிரீதியான பாகுபாடு விவகாரங்களை கவனமுடன் கையாள்வதற்கு பேராசிரியர்கள், அலுவலர்களிடம் அறிவுறுத்த வேண்டும். இதுதொடர்பாக கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட பணி விவரங்களை யுஜிசி இணையதளத்தில் உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி