வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாது - ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை! - kalviseithi

Sep 20, 2021

வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாது - ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரிக்கை!


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுக ளில் ஈடுபடுவோர் , வாழ் நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாத அளவுக்கு தடைவிதிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது . 

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் , உடற்கல்வி இயக்குநர் நிலை 1 , கணினி ஆசிரியர்கள் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வின்போது , தேர்வு மையங்களில் ஒழுங் கீனமான செயல்களில் ஈடு படுவோர் , சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் வகையில் நடக்கும் தேர் வர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் , அவர்கள் 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளில் பங்கேற்கமுடி யாத வகையில் தடைவிதிக்கப்படும் . 

மேலும் ஆயுட் காலம் முழுவதும் தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தற் போது எச்சரித்துள்ளது . 

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் . உடற் கல்வி இயக்குநர் , கணினி ஆசிரியர் பணியிடங்கள் 2,207 உள்ளன . இவற்றில் நிரப்பப்படாமல் உள்ள 247 காலியிடங்களும் , புதிய பணியிடங்கள் 1,960 இடங்களும் அடங்கும் . இந்த பணிக்கான போட் டித் தேர்வில் பங்கேற்க இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை தற்போது தொடங்கியுள்ளது . 

இதற்கான எழுத்து தேர்வு நவம்பர் 13 , 14 , 15 ம் தேதிகளில் நடத்த திட்டமி டப்பட்டுள்ளது . அதன்படி விண்ணப்ப பதிவேற்றம் , கட்டணம் செலுத்துதல் , உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலமே நடக்கும் . இதையடுத்து , தேர்வு மையங்களில் கடைபிடிக்க வேண் டிய விதிகளை ஆசிரி யர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது . கணினி வழியில் தேர்வு எழுத ஒவ்வொ ருவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் . 

- கர்ப்பிணிப் பெண் கள் , கடுமையான நோயால் பாதித்தவர்கள் அதற்கான சான்றுகளை சமர்ப்பித் தால் அவர்களுக்கு அரு கமை தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் . தேர்வு மையம் அமை யும் மாவட்டம் குறித்த விவரங்கள் 7 நாட்களுக்கு முன்னதாகவும் , தேர்வு மைய விவரம் தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக வும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் . ஹால்டிக்கெட்டுகள் இணைய வழியில் மட்டுமே வழங்கப்படும். 

முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான சந்தேகம் , கணினி வழி தேர்வில் இடம் பெறும் கேள்விகள் தொடர்பாக விடைக்குறிப் பும் ஆட்சேபணைகளும் மின்னஞ்சல் மூலமாக மட் டுமே அனுப்ப வேண்டும் . கட்ஆப் மதிப்பெண் இருந்தும் விண்ணப்பித்த பணிக்கான உரிய கல்வித் தகுதி இல்லை என்றால் நிராகரிக்கப்படுவார் . 

 நிர்வாக காரணங் கள் , நோய்த் தொற்று உள்ளிட்ட காரணங்களுக் காக , தேர்வு வாரியம் நடத்தும் தேர்வை தள்ளி வைக்கவோ , ரத்து செய் யவோவாரியத்துக்கு முழு உரிமை உள்ளது . 

தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர் வர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் விதமாக நடந்தால் கடு மையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்ப டும் . அவர்கள் 5 முதல் 7 ஆண்டுகள் வரை எந்த தேர்வும் எழுத முடியாத வகையில் தடை விதிக்கப்ப டும் . மேலும் ஆயுட்கால தடை விதிக்கவும் முடியும் .9 comments:

 1. பிஎட் 2020 இல் முடித்தவர்கள் அதற்கான தற்காலிக சான்றிதழ் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் களை கல்லூரியில் வாங்கி வைத்துகொண்டு அதன் பிறகு இத்தேர்விற்கு விண்ணப்பிக்கவும்

  ReplyDelete
 2. இத்தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் சுலபமானது பாடத்திட்டத்தை நன்றாக வரிக்கு வரி படிங்க நீங்களே சுயதேர்வு எழுதி மதிப்பீடு செய்ங்க

  ReplyDelete
 3. அது சரி,முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகளை என்ன செய்வது

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் முறைகேடுகள் தேர்வாணையங்களில் இருந்தே துவங்கி இருக்கிறது டிஎன்பிஎஸ்சி டிஆர்பி எதுவாக இருந்தாலும்... முந்தைய வரலாறு....
   அவர்கள் செய்யும் வியாபாரத்தில் தேர்வர்கள் பங்கேற்கின்றனர். எரியறத பிடுங்கனா கொதிக்கறது தானா அடங்கிடும்... ஆனா இங்க தலைகீழா நடக்கும். கன்னியாகுமரி தேர்வர் கவரப்பேட்டை திருப்பதி பார்டர் எக்ஸாம் செண்டெர்ல பரிட்சை எழுதுவார் முறைகேட்டை தடுப்பதற்காக...

   Delete
 4. நான் கலைஞரின் மகன் என்று அடிக்கடி சொல்லி ஒட்டு கேட்ட ஸ்டாலின் ஜெயலலிதா தொடங்கிய திட்டத்தையே செயல்படுத்தி வருகிறார்

  ReplyDelete
 5. Already people who are honest after passing TET no jobs. Now we crossed 45 what mistakes we have done for not getting govt jobs. So better try illegal way and get jobs otherwise no jobs.what kind of punishment .if theif caught in looting asking him not to do throughout his life.

  ReplyDelete
 6. வயது வரம்பை தளர்த்துங்கள்.பட்டதாரிகள் வயிற்றில் அடிக்காதீர்கள்.அவர்களுக்கும் ஒரு வாய்ப்பை கொடுங்கள். ஆட்சி மாற்றம் வேண்டும் என்று நம்பி வாக்களித்தார்கள்.வாக்களித்தவர்கள் வாயில் மண்.

  ReplyDelete
  Replies
  1. வயது வரம்பை தளர்த்துங்கள்.பட்டதாரிகள் வயிற்றில் அடிக்காதீர்கள்.அவர்களுக்கும் ஒரு வாய்ப்பை கொடுங்கள். ஆட்சி மாற்றம் வேண்டும் என்று நம்பி வாக்களித்தார்கள்.வாக்களித்தவர்கள் வாயில் மண் போடாதீர்கள்......

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி