பள்ளிக்கல்வி ஆணையாளர் பள்ளிகளை ஆய்வு செய்ய வருவதால் தலைமையாசிரியர்களுக்கு CEO அறிவுரை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2021

பள்ளிக்கல்வி ஆணையாளர் பள்ளிகளை ஆய்வு செய்ய வருவதால் தலைமையாசிரியர்களுக்கு CEO அறிவுரை!

 

முதன்மைக்கல்வி அலுவலக தொலைபேசி செய்திக்கிணங்க , தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையாளர் அவர்கள் மதுரையில் உள்ள பள்ளிகளை 09.09.2021 அன்று ஆய்வு செய்ய உள்ளதால் கீழ்க்கண்ட அறிவுரைகளின்படி செயல்பட அனைத்து வகை பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1 ) அனைத்து ஆசிரியர்கள் / அலுவலகப்பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் முகக்கவசமின்றி பள்ளியில் இருத்தல் கூடாது.

2 ) பள்ளிக்கு வரும் அனைத்து ஆசிரியர்கள் / அலுவலகப்பணியாளர்கள் மற்றும் மாணவர்களை வெப்பமாணி ( Thermal Scanner ) கொண்டு சரிபார்த்த பின்னரே பள்ளிக்கு அனுமதிக்க வேண்டும்.

3 ) அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் ( SOP ) - யினை பின்பற்றி ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் மட்டுமே இருத்தல் வேண்டும்.

4 ) அனைத்து ஆசிரியர்கள் / அலுவலகப்பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் தவறாது வைத்திருக்க வேண்டும்.

5 ) அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாடநூல்கள் / விலையில்லா பாடக்குறிப்பேடுகள் இன்றே ( 08.09.2021 ) வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

6 ) அனைத்து ஆசிரியர்களும் தங்களுக்குரிய பாடவேளை விவரங்கள் ( Time Table ) மற்றும் புத்தாக்க பயிற்சி கட்டகத்தின் விவரங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.

7 ) பள்ளியினை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்.

8 ) அனைத்து ஆசிரியர்கள் | அலுவலகப்பணியாளர்களும் தமிழக அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி