10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NTSE தேர்வுக்கான அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2021

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NTSE தேர்வுக்கான அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு.


2021-2022 - ம் கல்வியாண்டில் , அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் , 2022 ஜனவரி மாதம் 23 - ஆம் தேதி ( ஞாயிற்றுக் கிழமை ) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு ( NTSE ) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.


 விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 08.11.2021 முதல் 13.11.2021 வரை பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ .50 / - சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 13.11.2021 மேலும் காலஅவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது.


பொதுவான அறிவுரைகள் : 


தேர்வர்கள் ( NTSE ) தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்க தங்கள் பள்ளிக்கு வரும்பொழுது கட்டாயம் முககவசம் ( Mask ) அணிந்து வரவேண்டும் . போதிய சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் . முக்கிய குறிப்பு : தேர்வர்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் போதே தங்களது வகுப்புச் சான்றிதழை ( Community Certificate ) ( SC / ST / OBC ( Non - Creamy Layer ) / EWS ( Economically Weaker Section ) தவறாது சமர்ப்பிக்க வேண்டும்.


 தலைமை ஆசிரியரால் விண்ணப்பங்கள் Online- ல் பதிவேற்றம் செய்யப்படும் போது பதிவேற்றம் செய்யப்படாத வகுப்புச் சான்றிதழ்கள் பின்னர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


மேலும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்.


NTSE Notification - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி