12 மாவட்டங்களில் " இல்லம் தேடி கல்வி திட்டம் " - அமைச்சர் அன்பில் மகேஷ் - kalviseithi

Oct 18, 2021

12 மாவட்டங்களில் " இல்லம் தேடி கல்வி திட்டம் " - அமைச்சர் அன்பில் மகேஷ்


1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் தஞ்சை , திருச்சி . கடலூர் உட்பட 12 மாவட்டங்களில் வீடு தேடி பள்ளி என்ற மாலை நேர கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.


இல்லம் தேடி கல்வி


இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்ந்து 6 மாத காலத்திற்கு செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மேலும் இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் கற்றல் இடைவெளியை குறைக்க இயலும் எனவும் , இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாலை 5 மணி முதல் 7 மணி வரை மாணவர்களை மையங்களுக்கு அனுப்ப வேண்டும் தெரிவித்தார்.


தன்னார்வலர் :


 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற விகிதத்தில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை படித்த தன்னார்வலர் மூலமும்,  6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு பட்ட படிப்பு படித்த தன்னார்வலர் மூலமும் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தின் தொடக்கமாக விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கிவைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் மேற்கண்ட தகவல்களை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

12 comments:

 1. மிகவும் சிறப்பான திட்டம் வரவேற்கிறேன் �� மாணவச் செல்வங்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கும்

  ReplyDelete
 2. நீங்க புடுங்குற ஆணி எல்லாம் தேவையில்லாத ஆணி தான் 🤦‍♂️🤦‍♂️
  விரைவில் ஆசிரியர்களை நியமிக்கயும்

  ReplyDelete
 3. இந்த செய்தியை பார்க்கும் போது ப்ரண்ட்ஸ் பட வடிவேலு Apprentice காமெடி தான் ஞாபகம் வருகிறது... நம்ம அமைச்சர் புடுங்கறது எல்லாமே தேவை இல்லாத ஆணி தான்...

  ReplyDelete
 4. இவனுங்க போஸ்டிங் போடவே மாட்டானுங்க இதுவே உண்மை

  ReplyDelete
 5. Eligible age increased 50age vara apply panikalam. Tet pgtrb also

  ReplyDelete
 6. 31.12.2022 varaikum 50age vara eligible for tamilnadu government teacher

  ReplyDelete
 7. Education minister mr anbil magesh pooiyamozhi sir pls kindly request u to about parttime teacher permanent & pls considered about this with "CM"and take good & quick for this.😔😔😔😷😷🙏🙏

  ReplyDelete
 8. மொத்தத்தில் ஆசிரியர்களுக்கு ஒரு பெரிய ஆப்பு காத்திருக்கிறது.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி