பொதுத்துறை வங்கிகளில் 4132 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, வயது வரம்பு முழு தகவல்களுடன் - kalviseithi

Oct 20, 2021

பொதுத்துறை வங்கிகளில் 4132 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, வயது வரம்பு முழு தகவல்களுடன்

 

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது வங்கி காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Probationary Officer/ Management Trainee பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வங்கி காலிப்பணியிடங்கள்:


IBPS தேர்வு வாரியம் மூலமாக பல்வேறு வங்கிகளில் Probationary Officer/ Management Trainee பணிகளுக்கு 4000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


Probationary Officer வயது வரம்பு :

விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சமாக 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அதாவது 02.10.1991 முதல் 01.10.2001 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.


IBPS கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Degree (Graduation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்


IBPS தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் பட்டதாரிகள் Preliminary Examination, Main Examination, Document Verification & Interview ஆகிய நான்கு கட்ட சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

Preliminary Exam ஆனது 04.12.2021 & 11.12.2021 ஆகியோரை தேதிகளில் நடைபெற (தோராயமாக) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பக் கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.850/-

SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள் – ரூ.175/-

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 20.10.2021 முதல் 10.11.2021 அன்று வரை விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். இந்த அவகாசத்திற்குள் விண்ணப்பக் கட்டணத்தினையும் செலுத்திட வேண்டும்.


Download IBPS PO Notification PDF


Apply Online


Download IBPS Syllabus 


Official SiteNo comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி